நாளை நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (05.05.2025) இரண்டு கட்டங்களாக மு.ப 10.30 மணி மற்றும் மு. ப. 11.50 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், நாளை 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் தொடர்பாக, வாக்கெண்ணல் செயற்பாடு வட்டார நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களே வட்டாரத்தின் பிரதம வாக்கெண்ணும் அலுவலர்களாகவும், பெறுபேறுகளை வெளியிடும் அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளதால், வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கடமைகளை சரியான அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறும் தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக் கொண்டார். மேலும், இத் தேர்தலை நடாத்தும் பொறுப்பு சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலரை சார்ந்திருப்பதனால் சரியான முறையில் மேற்பார்வைகளை மேற்கொள்ளுமாறும், வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று சரியான முறையில் வாக்களிப்பு நிலையங்கள்தயார்படுத்தப்பட்டுள்ளதா என்பதனையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுடன், தேர்தலில் வாக்களிப்பு வீதங்களையும் குறிப்பிட்ட நேரங்களில் உடனுக்குடன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இயங்கும் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அறிக்கையிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. இ.சசீலன் அவர்களால் வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கப்பட்டதுடன், தேர்தல கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் திரு. பொ. தயானந்தன் அவர்களும் கலந்துகொண்டார்.
இக் கலந்துரையாடலில் 243 வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
1 2 3 4 5 6 7
 
நாளை மறுதினம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (04.05.2025) காலை 09.00 மணிக்கு நேரடி ஆய்வு செய்யப்பட்டது.
இக் கள ஆய்வில் பாதுகாப்பு ஏற்பாடுகள், மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொது வசதிகள், நலனோன்பு வசதிகள் மற்றும் மின்சார வசதிகள் போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இக் கள ஆய்வில் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. இ. சசீலன், தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதாரம் அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் திரு. பொ. தயானந்தன், மேலதிக அரசாங்க அதிபரும் (காணி) நலனோம்பல் உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.க.ஸ்ரீமோகனன், வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு ஏ. ஜே. ஹாலிங்க ஜெயசிங்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் உதவி தெரிவாட்சி அலுவலர்கள் பங்குபற்றினார்கள்.
 
1 2 3 4 5 6 7 
2025 ஆம் ஆண்டில் நிறைவேற்றவுள்ள சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்களில் உள்ளடங்கப்பட்டுள்ள காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவிற்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (03.05.2025) பி.ப 01.30 மணிக்கு களவிஜயம் செய்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால்
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 131.20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு அமைய, அத் திட்டங்களில் உள்ளடங்கியுள்ள காங்கேசன்துறை கடற்கரையில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா வின் பகுதி கடுமையான கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு சிறுவர் பூங்காவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் அவ் விடத்திற்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகைதருவதனாலும் அதனை விரைவாக புனரமைப்புச் செய்வது தொடர்பாக 30.04.2025 ஆம் திகதி மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய அரசாங்க அதிபர் மேற்படி நிலமைகளை நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
இவ் அரசாங்க அதிபரின் கள விஜயத்தின் போது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திருமதி. சி. சுதீஸ்னர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. வீ. சிவகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
 
1 2 3 4 5 6

தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணியானது 01.05.2025 ஆம் திகதி அன்று விடுவிக்கப்பட்டதற்கமைய, தெல்லிப்பளை பிரதேசத்திற்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (03.05.2025) மு.ப. 11.30 மணிக்கு நேரடியாக விஜயம் செய்தார்.
அந்த வகையில் வசாவிளான் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஒட்டகப்புலம் புனித அமலோற்பவ மாதா தேவாலயத்தில் பங்குத்தந்தை ஜே. ஏ. அருள்தாஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற பிராத்தனையில் பங்குகொண்டு, அங்கு கூடியிருந்த மக்களுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட 20 ஏக்கர் காணியினை பொதுமக்களுடன் சென்று பார்வையிட்டார்.
இதன் போது அப் பிரதேசத்தில் கண்ணிவெடி தொடர்பான பரிசீலனையில் ஈடுபட்டு வரும் Hallo Trust நிறுவனத்துடன் கலந்துரையாடிய அரசாங்க அதிபர், கண்ணிவெடி பரிசீலணையானது எதிர்வரும் 07.05.2025 ஆம் திகதியே நிறைவடைவதாக Hallo Trust நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும், அதனை அடுத்து 08.05.2025 ஆம் திகதி அன்று தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டதன் பின்னர் 09.05.2025 ஆம் திகதி பொதுமக்கள் தமது காணிகளுக்கச் சென்று காணிகளை அடையாளப்படுத்தி தொடர் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள மாங்கொல்லை கிராமத்திற்கு (15.13 ஏக்கர் காணி) அரசாங்க அதிபர் விஜயம் செய்தார்.
இவ் அரசாங்க அதிபர் விஜயத்தின் போது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திருமதி. சி. சுதீஸ்னர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. வீ. சிவகுமார், பாதுகாப்பு படை அதிகாரி, கிராம அலுவலர்கள், Hallo Trust நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அப் பிரிவுகளுக்குரிய பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
 
1 2 3 4 5