சமூக சக்தி - பன்முக வறுமை ஒழிப்புத் திட்டம் சனாதிபதி செயலகத்தின் வழிகாட்டுதலுடன், கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பன்முக வறுமை ஒழிப்புத் திட்டம் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (2026.06.02) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அந்தவகையில் "பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைகள்" நிகழ்ச்சித் திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் (2026.06.02) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களினால் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவின் மானிப்பாய் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் 02.00 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில், தெரிவு செய்யப்பட்ட "வருமானம் குறைந்த 10 குடும்பங்களை இணைத்து காளான் வளர்ப்பு கருத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது .
இந் நிகழ்வில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய கொடி ஏற்றபட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மங்கலவிளக்கேற்றபட்டு இறைவணக்கம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் வரவேற்புரையுடன், சமூக நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் குறித்த சிறப்புரையினை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் அவர்கள் நிகழ்த்தினார். மேலும், குறித்த நிகழ்ச்சித் திட்டத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ள பயனாளிகள் தெரிவிற்கான சான்றிதழ்கள் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து குறித்த நிகழ்ச்சித் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டபட்டு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதேவேளை யாழ் மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளிலும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் குறித்த நிகழ்ச்சித் திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றுவருகின்றதுடன், இவ் பன்முக வறுமை ஒழிப்புத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இவ்வாண்டுக்கு ரூபா 651.96 மில்லியன் ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி, மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ.சுரேந்திரநாதன், மானிப்பாய் கிழக்கு பிரஜா சக்தி குழுவின் தலைவரும் பிரதேச சபையின் உறுப்பினருமான திரு.ஞானரூபன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், துறைசார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31ஆம் திகதி சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தின் யாழ்ப்பாண மாவட்ட மட்ட கொடித் தின நிகழ்ச்சித் திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வானது "போதையற்ற ஓர் எதிர்காலம் ஆரோக்கியமான ஓர் தேசம்" எனும் தொனிப்பொருளில் ஆவரங்கால் சிவசக்தி மணி மண்டபத்தில் இன்றைய தினம்(2026.05.31) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் பொ.ஸ்ரீவர்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் மேலதிக மாவட்ட பணிப்பாளர் நாயகமுமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பிரதேச செயலாளர்கள் கலந்து கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் மங்கல விளக்கேற்றல், வரவேற்பு நடனத்தினை தொடர்ந்து தலைமையுரையுடன் வரவேற்புரையினை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் பொ.ஸ்ரீவர்ணன் அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினம் மாவட்ட மட்ட கொடித் தின நிகழ்ச்சித் திட்டத்தினை அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் சம்பிரதயாபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும் உத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாய மட்ட அமைப்பு பிரதிநிதிகளின் கௌரவிப்பு, குறுநாடகம், வங்கி தரப்படுத்தலில் சிறந்த பெறுபெறுகளை வெளிப்படுத்திய சமுர்த்தி வங்கிகளுக்கு தேசிய மட்டச் சான்றிதழ் வழங்கல், வங்கியில் கூடுதலான சேமிப்பை மேற்கொண்ட உத்தியோகத்தர் கெளரவிப்பு, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தொழிற்பயிற்சியினை பூர்த்தி செய்தவர்களுக்கு தொழில் பயிற்சிச் சான்றிதழ் வழங்கல் முதலான நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், சமுர்த்தி கணக்காளர், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 19 20 21 22 23
நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர் ஆகிய தீவகப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.05.2026) புதன்கிழமை காலை 10.00 மணிக்கு வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன், குறித்த தீவக பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் கெளரவ கருணநாதன் இளங்குமரன், கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், பிரதேச சபைகளின் கௌரவ தவிசாளர்கள், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கடற்படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் வரவேற்புரையுடன் இக்கலந்துரையாடல் ஆரம்பமானது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கௌரவ இ.சந்திரசேகர் அவர்களின் கருத்துரைகளைத் தொடர்ந்து ஒவ்வொரு துறைசார்ந்த விடயங்களும் தனித்தனியாக விரிவாக ஆராயப்பட்டன.
குறிப்பாக கல்வித்துறை, போக்குவரத்துத் துறை, நீர் விநியோகம், சுகாதாரத் துறை, கால்நடை மற்றும் கூட்டுறவுத் துறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர் ஆகிய தீவகப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.05.2026) புதன்கிழமை காலை 10.00 மணிக்கு வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன், குறித்த தீவக பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் கெளரவ கருணநாதன் இளங்குமரன், கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், பிரதேச சபைகளின் கௌரவ தவிசாளர்கள், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கடற்படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் வரவேற்புரையுடன் இக்கலந்துரையாடல் ஆரம்பமானது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கௌரவ இ.சந்திரசேகர் அவர்களின் கருத்துரைகளைத் தொடர்ந்து ஒவ்வொரு துறைசார்ந்த விடயங்களும் தனித்தனியாக விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக கல்வித்துறை, போக்குவரத்துத் துறை, நீர் விநியோகம், சுகாதாரத் துறை, கால்நடை மற்றும் கூட்டுறவுத் துறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 
1 2 3 4 5 6 7 8 9 9 10 11 12 13 13 14
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் வெசாக் தின நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(30.05.2026) காலை 10.00மணிக்கு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் வணக்கத்துக்குரிய பௌத்த மதகுரு ஸ்ரீ நாகவிகாரை விகாராதிபதி மீஹாஹ ஜந்துறே ஸ்ரீவிமல தேரோ அவர்கள் கலந்துகொண்டு வெசாக் தினம் தொடர்பாக ஆசியுரை வழங்கியபோது, பெளத்தம் இந்தியாவில் தோற்றம் பெற்றதாகவும், புத்த பெருமான் பிறப்பு, ஞானம் அடைந்த மற்றும் முக்தி அடைந்த தினமே வெசாக் பௌர்ணமி தினம் எனவும், புத்த பகவான் விஷ்ணுவின் அவதாரமாக பெளத்த மக்களால் கருதப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், உலகத்தின் அனைத்து மக்களும் தர்மத்தின் வழியில் வாழ வேண்டும் எனவும், இலங்கை வாழ் மக்களாகிய நாம் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என இந்த வெசாக் பௌர்ணமி தினத்தில் ஆசீர்வாதம் செய்வதாகவும் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் வட மாகாண கடற்படைத் தளபதி, வடமாகாண விமானப்படைத் தளபதி, யாழ் மாவட்ட 51 வது படைப்பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி, 512 ஆவது படைப்பிரிவின் இராணுவ தளபதி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் , உதவி மாவட்டச் செயலாளர், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம்(26.05.2026) விஜயம் செய்த பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ அருண ஜெயசேகர அவர்கள் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கு கள ஆய்வொன்றினை மேற்கொண்டிருந்தார். இதன் போது கெளரவ பிரதி அமைச்சருடன், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாணம் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன, மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா.ஜெயகரன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவகங்கா சுதீஷ்னர், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ எஸ். கபிலன், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் திரு.எஸ்.சிறிவாகீசன் ஆகியோரும் இணைந்திருந்தனர்.
இதன் போது உயர் பாதுகாப்பு வலயத்தின் காணிகளில் இதுவரை 21,280 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக பலாலி வீதியின் கிழக்கில் உள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்க அதிபரால் கெளர அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது, பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக கெளரவ பிரதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது. மேலும், 1986 ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்திற்கான காணி விஸ்திரிக்கப்பட்ட போது அக் காணிக்கான நட்டஈடு இதுவரை வழங்கப்படவில்லை என அரசாங்க அதிபரால் கெளரவ பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போது, விரைவில் கொழும்பில் தனியான கலந்துரையாடலில் இது தொடர்பாக ஆராய்வதாக கெளரவ பிரதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள வழிபாட்டுத்தலங்களில் வழிபடுவதற்கான நடவடிக்கைகளையும், வேலுப்பிள்ளை வித்தியாலயத்தின் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கெளரவ பிரதி அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
 
 
1 2 3 45 6 8 109 11 12 13