உலக சுற்றாடல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு பழைய பூங்காவில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (05.06.2025) காலை 10.00 மணிக்கு பயன்தரு மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. சென்ற ஆண்டு இதே நாளில் அரசாங்க அதிபர் தலைமையில் பழைய பூங்காவை பசுமைக்காடாக்கல் செயற்றிட்டத்தின் கீழ் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆளுக்கொரு மரத்தினை நாட்டி தொடர்ந்து சீராக நீர் ஊற்றி வந்ததன் பயனாக தற்போது 275 மேற்பட்ட மரக்கன்றுகள் செழிப்பாக வளர்ந்துள்ளதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. 'மரம் நடுகை' நமது எதிர்காலத்திற்கான பெரிய முதலீடாகும். எமது எதிர்காலச் சந்ததியினருக்கு தூய்மையான காற்று, வெப்பமயமாதலை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட இயற்கையைப் பாதுகாக்கும் செயற்றிட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சுற்றாடலைப் பாதுகாப்போம்!
 
 
1 2 3 4 5 6 7 8 9 10
"சுற்றுச் சூழலை பாதுகாப்போம், இலத்திரனியல் கழிவுகளை மறுசுழற்சி செய்வோம்" எனும் தொனிப்பொருளிற்கு அமைய, இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் பெட்டிகள் உலக சுற்றாடல் தினமான இன்றைய தினம்(05.06.2026) அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் கொமர்ஷியல் வங்கியின் யாழ்ப்பாண முகாமையாளர் திரு. T. யோகச்சந்திரா அவர்களால் கையளிக்கப்பட்டது. இதன் போது உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் திரு. L. C. ஆனந்த், நிர்வாக உத்தியோகத்தர் திரு. கி.பொ. தனபால, கொமர்ஷியல் வங்கியின் உதவி முகாமையாளர் திரு. G.ரமணன் உள்ளிட்ட அலுவலகல்களும் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4
உலக சுற்றாடல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 05 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. சுற்றாடல் அமைச்சு மே மாதம் 30ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 05ஆம் திகதி வரை சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தி பல்வேறு விழிப்புணர்வு செயற்றிட்டங்களை பரவலாக முன்னெடுத்து வருகிறது. இந் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வின் ஓர் அங்கமாக யாழ். A-Head Trust முன்பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச் சூழல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்றைய தினம்(04.06.2026) வியாழக்கிழமை காலை 08.30 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாவட்ட செயலக சுற்றாடல் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து கருத்துத் தெரிவிக்கையில், முன்பள்ளி பருவம் பிள்ளைகளின் வாழ்க்கை மிக முக்கியமான பருவமாகும். இப் பருவம் குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கான வலுவான அடித்தளமாக அமைகின்றது எனவும், சமூகமயமாக்கல் செயற்பாடு என்பது முன்பள்ளிகளிலேயே ஆரம்பமாகின்றது எனவும் தெரிவித்தார். மேலும், குழந்தை பிறந்து தனது வீட்டு சூழலை விட்டு முதல்முதலாக வெளிச்சூழலுடன் பழகும் வாய்ப்பு முன்பள்ளிகளிலேயே ஏற்படுத்தப்படுகின்றது எனவும், பிள்ளைகளை சரியாக வழிப்படுத்தி நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அனுப்புகின்றனர் எனவும், எனவே இந்த சிறார்களை சரியான வழியில் வழிபடுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், இச் சிறப்பான நிகழ்வாக ஒழுங்குபடுத்திய மாவட்ட செயலக உத்தியோகத்தருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன், சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தமைக்கும் தனது பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும், இந்த செயற்பாடுகள் சிறப்பாக அமையவேண்டும் என்றும், சிறுவர்களின் எதிர்காலம் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்றும் அரசாங்க அதிபர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மனப்பாங்கு மேம்பாட்டின் மூலம் சூழல் பாதுகாப்புக்கு பங்களித்தல் எனும் நோக்கில் விழிப்புணர்வு ஓவியங்களால் உருவாக்கப்பட்ட பிரசுரங்கள் சிறார்களுக்கு வழங்கி வைக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டன. மேலும், கழிவுகளை தரம் பிரித்து அகற்றும் மனப்பாங்கினை பள்ளிச்சிறார்களுக்கு ஏற்படுத்தும் முகமாக குப்பை தொட்டிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், நிகழ்வின் நினைவாக வளாகத்தில் மரக்கன்றும் நாட்டி வைக்கப்பட்டது. தொடர்ந்து "சுற்றாடல் மாற்றங்களுக்கு எதிராக செயற்படுவோம்" எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தினை சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. வி.பரணிதா நிகழ்த்தினார். இந் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் Dr. P.A டினேஷ் குஞ்ஜே, A-Head Trust முன்பள்ளி இணைப்பாளர் திரு. G. சஜரூபன், மாவட்ட செயலக சுற்றாடல் கிளை உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (04.06.2026) காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் பெளதீக மற்றும் நிதி முன்னேற்றத்தினை ஆராய்வதுடன், கணக்காய்வு ஐய வினாக்கள் தொடர்பிலும் கலந்துரையாடி அபிவிருத்தி வேலைத் திட்டங்களை குறிப்பிட்ட காலத்தில் முடிவுறுத்துவதற்காக ஆராய்வதற்கும் இக் கூட்டம் கூட்டப்பாட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும், நிதி ஒதுக்கீடுகளுக்கு அமைய வேலைத் திட்டங்களை குறிப்பிட்ட கால அவகாசத்தில் முடிவுறுத்திய பிரதேச செயலாளர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டதுடன், அடுத்த நிதியாண்டின் நிதி முகாமைத்துவம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம், சமூக சக்தி திட்டம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடமைப்பு, வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வளங்கல் அமைச்சின் வேலைத் திட்டங்கள், சுற்றாடல் அமைச்சின் வேலைத் திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களின் முடிவுறுத்திய, முடிவுறத்தாத திட்டங்கள் தொடர்பாக அரசாங்க அதிபரால் ஆராயப்பட்டு, உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட, பிரதேச செயலகங்களின் பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் கணக்காளர்கள், விடைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9
உலக YMCA ஸ்தாபகர் சேர் ஜோர்ஜ் வில்லியம் அவர்களின் ஸ்தாபக தினம் ஜூன் மாதம் 06ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் YMCA ஜூன் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 06ஆம் திகதி வரை "Avoid Polyethene to Save Nature" எனும் தொனிப்பொருளில் கொடிவாரத்தை முன்னெடுக்கின்றது. அந்த வகையில் இன்றைய தினம் (03.06.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை YMCA இன் தலைவர் திரு.த.யூதராஜா, பொதுச் செயலாளர் திரு.எஸ். ஜெயராஜசிங்கம், முன்னாள் தலைவர் திரு.ஆர்.வினோத் மற்றும் நிறுவன பணியாளர்கள் சந்தித்து - கொடி அணிவிக்கப்பட்டு கொடிவார விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.
 
 
1 2 3 4