தற்காலிக இடங்களில் இயங்கி வந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கான புதிய நிரந்தரக் கட்டடம் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கௌரவ ஆனந்த விஜயபால அவர்களினால் இன்றைய தினம்(14.06.2026) காலை 08.30 மணிக்கு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வின் ஆரம்பத்தில் வருகை தந்த அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. பின்னர் புதிய பொலிஸ் நிலையக் கட்டடம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டதுடன், அதிதிகள் கட்டடத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டனர். மேலும், நினைவாக பொலிஸ் நிலைய வளாகத்தில் மரநடுகை நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது. மேலும் இதற்கு முன் கோப்பாய் இராசவீதியில் தனியார் வீடுகளில் இயங்கிய பொலீஸ் நிலையம் நிரந்தர இடத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு அவர்களது வீடுகளின் சாவிகள் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் வட மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ கருணநாதன் இளங்குமரன், கௌரவ வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, கௌரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், பொலிஸ்மா அதிபர் திரு. பிரியந்த வீரசூர்யா, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் புத்திக்க சிறிவர்த்தன, யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன, வடக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. சி.என்.மாரப்பன, யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. ஜெ. பி. எஸ். ஜயமக, காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.பி.எம். ஆர். அம்பிட்டிய, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு. எஸ்.கபிலன், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். புதிய நிரந்தரக் கட்டடத்தின் திறப்பின் மூலம், கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் நீண்டகால கட்டமைப்பு தேவைக்கு தீர்வு கிடைத்துள்ளதுடன், பிரதேச மக்களுக்கு மேலும் திறனுள்ள மற்றும் மேம்பட்ட பொலிஸ் சேவைகளை வழங்குவதற்கான புதிய அத்தியாயம் உருவாகியுள்ளது.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 13 14 15 16
மாலைதீவில் எதிர்வரும் 18.06.2026 ஆம் திகதி தொடக்கம் 20.06.2026 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள South Asia Speed Skating Championship (ஸ்கேற்றிங் விரைவோட்டம்) போட்டியில் Dreamer United Sports Academy சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து ஒரே ஒரு மாணவியாக - சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் ஆண்டு 09 இல் கல்வி கற்கும் மாணவி செல்வி ஷாருதி தர்மரூபன் அவர்கள் பங்குபற்றவுள்ளார். இதனையொட்டி இன்றைய தினம் (12.06.2026) அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை மாணவி சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். இதன் போது போட்டியின் விபரங்களை கேட்டறிந்த அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பங்குபற்றுவது குறித்து தமது மகிழ்ச்சியினைத் தெரிவித்ததுடன், போட்டியில் வெற்றி பெற தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். இச் சந்திப்பில் மாவட்டச் விளையாட்டு உத்தியோகத்தர் திரு. கே.விஜிதரன், விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. எல். அநுரகாந்தன், டிறிபேக் கல்லூரி ஆசிரியர் திரு. எஸ்.ஜெபநேசன், மாணவியின் தாயார் திருமதி சிவசங்கரி தர்மரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் அரசாங்க தகவல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த பாடசாலை ஊடகக் கழகங்களுக்கு பொறுப்பான ஆசிரியர்கள் மற்றும் தொடர்பாடலும் ஊடகக் கற்கைகளும் பாட ஆசிரியர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு இன்றையதினம்(12.06.2026) காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஆய்வுகூடத்தில் நடைபெற்றது. அரசாங்க தகவல் திணைக்களம் தரமான ஊடக அறிவுள்ள பாடசாலை சமூகத்தை உருவாக்கும் நோக்கில் துறைசார் ஆசிரியர்களை தெளிவுபடுத்தும் மாகாண நிகழ்ச்சித் திட்டம் - 2026 இன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இச் செயலமர்வில் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளில் தொடர்பாடலும் ஊடகக் கற்கைகள் பாடத்தினை கற்பிக்கும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன், அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்துக் கருத்துத் தெரிவிக்கையில், இன்றைய காலகட்டத்தில் ஊடகத்துறையின் வளர்ச்சி மற்றும் அதன் செயற்பாடுகள் சகல துறைகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், தற்போது Al தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சகல துறைகளிலும் செல்வாக்குச் செலுத்துகிறது. இந் நிலையில் ஊடக விளங்கறிவு அவசியமானதொன்றாகும். இது தொடர்பாக மாணவர்களுக்கு சரியான தெளிவூட்டலை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்றும், இதன் அடிப்படையிலேயே பாடசாலைகளில் ஊடகக் கழகங்கள் அமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஒரு ஊடகத்தின் செயற்பாடானது வெறுமனே தனது வருமானத்தை அதிகரிப்பதை மட்டுமல்லாமல் சமூக நன்மையை கருத்தில் கொண்டு அதன் ஒவ்வொரு செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்றும், ஊடக துறையின் வளர்ச்சியானது வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும் அதன் சில செயற்பாடுகள் சமூக சீரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன எனவும், இது தொடர்பில் சமூக ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும், ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் செய்தி உண்மையானதா மாறாக அது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உண்மைக்கு முரணாக எழுதப்பட்டுள்ளதா என்பதை பிரித்தறியும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு
ஒரு தெளிவினை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நிகழ்வில் தொடர்ந்து அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே பண்டார அவர்களின் விசேட உரை காணொளி ஊடாக பகிரப்பட்டது. தொடர்ந்து நவீன ஊடகப் போக்குகள், ஊடகப் பண்பாடு செல்நெறி மற்றும் ஊடகக் கற்கைகளின் தற்போதைய முக்கியத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவு ஆகிய எண்ணக்கருக்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் பேராசிரியர் எஸ்.ரகுராம் அவர்கள் விரிவுரையாற்றினார். ஊடக ஒழுங்குமுறை, ஊடக ஒழுங்குப்படுத்தலின் தேவை மற்றும் சமூக ஊடக அறிவு (Social Media Literacy) குறித்து ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் திருமதி. பூங்குழலி ஸ்ரீசங்கீர்த்தனன் அவர்கள் விளக்கமளித்தார்.
மேலும் ஊடகக் கழகங்களுக்கான மூலோபாயத் திட்டமிடல் மற்றும் மாணவர்களின் ஆளுமை விருத்தியில் ஊடகக் கழகங்களின் வகிபாகம் குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல் உத்தியோகத்தர் திரு. எஸ்.ஏ.எம்.பவாஸ் உரையாற்றினார். தொடர்ந்து ஒலி - ஒளி காட்சிப்படுத்தலும் கலையகப் பணிகளும், இன்றைய காலத்தில் முக்கியத்துவம் பெற்று வரும் மொபைல் ஊடகவியல் (Mobile Journalism - MOJO) தொடர்பில் ஊடகக் கற்கைகள் துறையின் Audio Visuual தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு. த.சிவனேசன் அவர்களினால் செய்முறை ரீதியில் விளக்கமளிக்கப்பட்டது. இச் செயலமர்வில் யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையில் விரிவுரையாளர்கள், மாவட்ட ஊடகப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் தொடர்பாடலும் ஊடகக் கற்கைகளும் பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11

2026 ஆம் ஆண்டுக்கான மாவட்ட விலை நிர்ணயக் குழுக்கூட்டத்தின் இரண்டாவது அரையாண்டுக்கான கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் மற்றும் , வடக்கு மாகாண பிரதம பிரதிச் செயலாளர்(பொறியியல்) எந்திரி திரு. சுதாகர் அவர்களின் இணைத் தலைமையில் இன்றைய தினம் (11.06.2026) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், மாவட்ட விலை நிர்ணயக் கூட்டமானது மிக அவசியமானது எனவும், அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் மற்றும் தனியார் துறைக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான விலைகள் நிர்ணயம் அவசியமாகவுள்ளது எனவும், ஆனால் தைமாதம் விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும் தற்போது அவ் விலைக்கு பொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமா என கேள்வி ஏற்படுகின்றது, எரிபொருள் விலைகள் தாக்கத்தினை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். இதன் காரணத்தினால் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதன் விலைக்கு பொருட்கள் சேவைகளை பெற முடியாமா என்பதனை ஆராய்வதுடன், தேவைக்கு ஏற்றவகையில் இவ் விலை நிர்ணயக் கூட்டத்தினை காலாண்டுக்கு ஒரு தடவை நடாத்துவது தொடர்பாகவும் தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்ததுடன், அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாட்டிற்கு விலை நிர்ணயக் கூட்டம் வழிப்படுத்துவதற்கான பொறிமுறையாக அமைகிறது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இக் கூட்டத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான விலைகள் ஆராயப்பட்டு நிர்ணயிக்கப்பட்டது. இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், பிரதம பொறியியலாளர் எந்திரி திரு க.திருக்குமார், பிரதம கணக்காளர் எஸ்.கிருபாகரன், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், தொடர்புடைய சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10