யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களுடனான கலந்துரையாடல் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ ஹர்ஷன நானாயக்கார அவர்களின் தலைமையிலும், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பங்குபற்றுதலுடனும் இன்றைய தினம்(20.06.2026) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தேசிய நல்லிணக்கம் மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் தெளிவூட்டும் முகமாக இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக் கலந்துரையாடலில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்தவர்களிடம் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் கேட்டறிந்து கொண்டார். குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ கருணநாதன் இளங்குமரன், கெளரவ வைத்தியர் ச.ஸ்ரீபவானந்தராஜா, மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே.சிவகரன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு.எஸ்.கபிலன், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் திரு.மகேஸ்கட்டுலந்த ,காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆனையாளர்கள், பிராந்திய இனைப்பாளர் த .செல்வக்குமார் மற்றும் உத்தியோகத்தர்கள் , காணாமல் போனவர்களின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 4 5 6 7 8 9 11 13 14
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (19.06.2026) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து, வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களினால் இணைத் தலைமையுரையாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களினால் தலைமையுரையாற்றப்பட்டது.
கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் எடுத்த தீர்மானங்களுக்கு அமைய அதன் முன்னேற்ற நடவடிக்கைகளும் ஆராயப்பட்டன. மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டம், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு குடிநீர் விநியோகம், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆளணிப் பற்றாக்குறை, வீடமைப்பு திட்டம், விடுவிக்கப்பட வேண்டிய காணி விடயம், அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் கோரிக்கை தொடர்பாகவும் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம், கெளரவ வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கெளரவ வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்,
வடக்கு மாகாண சபையின் பேரவைத் தலைவர் கெளரவ சி.வி.கே சிவஞானம், கெளரவ பிரதி முதல்வர், கெளரவ நகர மற்றும் பிரதேச சபைகளின் கெளரவ தவிசாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வட மாகாண கடற்படைத் தளபதி, பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
 
தேசிய உற்பத்தி திறன் செயலகத்தால் நடாத்தப்பட்ட "மக்கள் மைய நிர்வாகம்" Citizen Mirror : Divisional Productivity Index - 1.0 போட்டியில் நல்லூர் பிரதேச செயலகம் அகில இலங்கை ரீதியில் 340 பிரதேச செயலகங்கள் பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்று அதற்கான சான்றிதழினை நேற்றைய தினம் (16.06.2026) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி. யசோதா உதயகுமார் அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சஞ்சீவ் சுதாசினி அவர்களும், நல்லூர் பிரதேச செயலகத்தின் சார்பில் பெற்றுக்கொண்டனர். இதனையொட்டி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (17.06.2026) நல்லூர் பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்து பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரையும் வாழ்த்தி பாராட்டியதுடன், உத்தியோகத்தர்களுடன் மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இது அரச பொறிமுறையில் முன்னணி வகிக்கும் சேவை வழங்கல் வலையமைப்பு, பிரதேச செயலகங்களின் உற்பத்தித்திறனை அளவீடு செய்வதற்கும் , மதிப்பீடு செய்வதற்கும் "மக்கள் மைய நிர்வாகம்" (Citizen Mirror) பிரதேச உற்பத்தி்த்திறன் சுட்டெண் 1.0 தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பிரகாரம் நிர்வாகப் பிரிவு, கணக்குப் பிரிவு, திட்டமிடல் பிரிவு, காணிப் பிரிவு, பதிவாளர் பிரிவு, வெளிக்களப் பிரிவு மற்றும் விசேட செயற்றிட்டம் எனும் ஏழு பிரிவு ரீதியான தரவுகளை உள்ளிட்டு அகில இலங்கை ரீதியில் 96.23% புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலாவது நிலைக்கு நல்லூர் பிரதேச செயலகம் தரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
1 2 3 4 5 6 7
கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (18.06.2026) பிற்பகல் 2.00 மணிக்கு காரைநகர் சீ நோர் படகு தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கலந்து கொண்டு மீனவர்களுக்கான படகுகள் மற்றும் வலைகளை வழங்கி வைத்தார். இதன்போது முதலாம் கட்டமாக ரூபா 1.800 மில்லியன் பெறுமதியான 32 வலைகளும், ரூபா 8.640 மில்லியன் பெறுமதியான 18 படகுகளும் வழங்கி வைக்கப்பட்டன. இதில், தலா ரூபா 480,000.00 பெறுமதியான 18 படகுகளில், யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 03 படகுகளும் ( நெடுந்தீவிற்கு 02 படகுகளும், காரைநகருக்கு 01 படகுகள்), முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 13 படகுகளும், மன்னார் மாவட்டத்திற்கு 02 படகுகளுமாக வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.சிவகரன், காரைநகர் பிரதேச செயலாளர் நிரஞ்சனா நவரத்தினம், காரைநகர் சீ நோர் படகு தொழிற்சாலை பணிப்பாளர் திரு.றோகன, சீ நோர் படகுதிருத்தும் நிறுவனத்தின் தலைவர் திரு. வசந்தமானபெரும, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு. அகிலன், முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு. சுதாகர், மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு. ரமேஸ்கண்ணா, திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 10 11 12 13 14 15 16
கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் தொழிற் கல்வி மாணவர்களுக்கான வெளிநாட்டு உயர்கல்வி கற்கை நெறிகளை பயில்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.06.2026) பி.ப 3.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், Synergy Concultant நிறுவனமானது வெளிநாட்டில் உயர்கல்வியை தொடர விரும்பும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் அவர்களின் எதிர்கால நலன் கருதியும் "SYNERGY EDU FIESTA "விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்தை நடாத்துவதற்கான அனுமதியை கோரி இருந்ததாகவும், அதற்கான உயர்கல்வி நிறுவனங்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் , அது தொடர்பான அடுத்த கட்ட கலந்துரையாடலுக்காக Synergy Concultant நிறுவனம் போன்று செயற்படும் நிறுவனங்களையும் அழைத்து அவற்றின் செயற்பாடுகள், நோக்கம் குறித்தும் கலந்துரையாடி மாணவர்களை வெளிநாட்டு கற்கை நெறிகளை தொடர்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காகவும் இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வெளிநாட்டில் மாணவர்களுக்கான உயர் கல்விக்கான வாய்ப்புகளும் விசா வசதிகளும் வழங்கல், மாணவர்களுக்கான விசா விண்ணப்ப செயல்முறை, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்களுக்கு இடையிலான தொடர்புகளை ஏற்படுத்தல், புலமைப்பரிசில் வாய்ப்புகள் மற்றும் மாணவர்களுக்கான admission process education pathway தகவல்களை வழங்குதல் போன்றன தொடர்பாக Synergy Concultant நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.சுலோஜன் விபுல் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், உதவி மாவட்ட செயலாளர், பிராந்திய சமுத்திரப்ப பல்கலைக்கழகத்தின் உதவி பணிப்பாளர், தொழில்நுட்பக் கல்லூரி பணிப்பாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி பணிப்பாளர், தேசிய பயலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் (NAITA) முகாமையாளர், SOS சிறுவர் கிராமத்தின் பணிப்பாளர், இலங்கை ஜேர்மன் தொழிற்கல்வி நிர்வாகத்தின் பணிப்பாளர், மருத்துவ விஞ்ஞான நிர்வாகத்தின் பணிப்பாளர், சுகநல பணிமனையின் பணிப்பாளர், கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர், யாழ்ப்பாணம், தீவகம், தென்மராட்சி, வடமராட்சி, வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் விடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 8 8