உற்பத்தி திறன் தொடர்பாக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சிறு தொழில் முயற்சியாண்மைக்கான 03 நாள் வழிகாட்டல் பயிற்சி பட்டறை இன்றைய தினம்(23.06.2026) மாவட்ட அரசாங்க அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இந்த பயிற்சி நெறி பிரதானமாக இரண்டு விடயங்களை உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், அதாவது சிறு தொழில் முயற்சியாளர்களுடைய உற்பத்தியை அதிகரிப்பதும் மற்றும் அவர்களுடைய உற்பத்தி திறன் சார்ந்த செயற்பாடுகளை அதிகரிப்பதும் என்ற அடிப்படையில் இப்ப பயிற்சி நெறி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், பிரதேச மட்டங்களில் பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் இணைந்த வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவைப்பாடு உள்ளதாகவும், இந்த இரண்டு விடயங்களை ஒருமித்த வகையில் முன்னெடுக்கும் போது முயற்சியாண்மை செயல்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். ஒரு தொழில் முயற்சியாளருக்கு அறிவு, திறன், மனப்பாங்கு என்ற மூன்று செயற்பாடுகளும் முக்கியமானதாக காணப்படுகின்றது. இதில் மிக மிக முக்கியமாக அவர்களுடைய மனப்பாங்கு வளர்ச்சி. சில வேளைகளில் இது சிலருக்கு கடினமாக இருக்கும் சிலரின் மனப்பாங்கு அபரிவிதமான எண்ணங்களை கொண்டதாகவும் இருக்கும், ஒரு சிறு தொழில் முயற்சியாளரைப் பார்த்தால் அவருடைய முழு செயற்பாடும் எப்படி உள்ளது மற்றும் அவர்களின் உற்பத்தித் திறன் சார்ந்த செயற்பாடுகள் எப்படி உள்ளன என்பதை கவனிக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பாரம்பரிய உணவுப் பொருட்களுக்கு இன்றும் புலம்பெயர் மக்களிடம் கிராக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இப் பயிற்சி பட்டறை மூலம் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு ஏற்பட்ட நன்மைகள் தொடர்பான முன்னேற்ற விபரங்களை அறிக்கையிடுமாறும் கேட்டுக் கொண்டார். இச் செயலமர்வில் வளவாளராக மன்னார் மாவட்டச் செயலக உற்பத்தித் திறன் உத்தியோகத்தர் திரு. P. R. றொபின்சன் அவர்கள் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினார். இச் செயலமர்வில் சிறு தொழில் முயற்சிப் பிரிவின் பதில் உதவிப் பணிப்பாளர் திரு. எஸ்.சஜீபன், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
 
 
1 2 3 4 5 6
மாவட்டச் செயலகம், தெல்லிப்பளை மற்றும் மருதங்கேணியில் கடமையாற்றும் சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான உள சமூகம் தொடர்பான செயலமர்வு இன்றைய தினம்(23.06.2026) காலை 09.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், மாவட்டச் செயலகத்திலும், கிராம மட்டத்திலும் சிறுவர் பெண்கள் அபிவிருத்தியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் உள சமூகம் சார்ந்த மேலதிக அறிவுகளைப் பெற்று மேலும் வினைத்திறனான செயற்பாட்டிற்காக பயன்வாய்ந்ததாக அமைகின்றது. மேலும், மருதங்கேணி மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் சமூகத்தில் நலிவடைந்தவர்களை உள சமூக ஆதரவூடாக வலிப்படுத்துவதற்கான வைகறை வேலைத் திட்டத்தினை மேற்கொண்டுவரும் FairMed நிறுவனம் இச் செயலமர்விற்கும் அனுசரணை வழங்கியுள்ளதற்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், கிராம மட்டத்தில் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தியானது அவசியமானது அந்தவகையில் இச் செயலமர்வில் வளவாளர்களாக பங்குபற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை உள மருத்தவ நிபுணர் எஸ்.சிவதாஸ் உள்ளிட்டவர்களால் தெரிவிக்கப்படும் கருத்துரைகள் மற்றும் நுட்பங்களை கருத்தில் எடுத்து மேலும் சிறப்பாக கடமையாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
இச் செயலமர்வில் வளவாளர்களாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை உள மருத்தவ நிபுணர் எஸ். சிவதாஸ் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகவியல் துறையின் தலைவர் கலாநிதி எஸ்.ஜீவசுதன் ஆகியோர் பங்குபற்றினார்கள். இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு Fair Med நிறுவன திட்ட உத்தியோகத்தர் திரு. றெனி, அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு ந.தயாபரன், மாவட்டச் செயலகம், தெல்லிப்பளை மற்றும் மருதங்கேணி பிரதேச செயலக பெண்கள் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6
சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் நாயகம் திரு. H. P. சோமதிலக அவர்கள் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம்(22.06.2026) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் இவ்வாண்டு சுற்றுலா அமைச்சின் ஊடாக 130 மில்லியன் ரூபாவில் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி திட்டங்களின் தற்போதைய நிலைமைகளை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
 
 
1 2
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில், இலங்கை இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் இராணுவ வீரர் லான்ஸ் கோப்ரல் எம்.ஆர். ராஜா அவர்களுக்கு வீடு நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (23.06.2026) காலை 7.00 மணிக்கு நடைபெற்றது. இராணுவத்தின் சேவா வனிதா பிரிவின் அனுசரணையில் 15 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இவ் வீடு, எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி பயனாளியிடம் கையளிக்கப்படவுள்ளது. இந் நிகழ்வில் சர்வமத தலைவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி, கோப்பாய் பிரதேச செயலாளர், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், வட மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் 12ஆவது சர்வதேச யோகா தின நிகழ்வு இன்று (20.06.2026) காலை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்திய துணைத் தூதுவர் கெளரவ சாய் முரளி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சித்த மற்றும் ஆயுர்வேத வைத்தியர்கள், யோகாசன ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 2,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனப் பயிற்சிகள் மற்றும் கலைநிகழ்வுகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந் நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர் கெளரவ சாய் முரளி அவர்கள் உரையாற்றுகையில் யோகா உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, ஆரோக்கியமான முதுமை வாழ்வுக்கும் பெரும் பங்களிப்பை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
இம்முறை சர்வதேச யோகா தினம் “ஆரோக்கியமான முதுமைக்கான யோகம்” என்ற தொனிப்பொருளின் கீழ் அனுஷ்டிக்கப்பட்டது. மேலும் இந் நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இந்திய துணைத் தூதரகத்தின் சார்பில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர்.T. சத்தியமூர்த்தி, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே.சிவகரன்,வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த வைத்திய பீட வைத்தியர்கள், யோகாசன ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13