தமிழ் மொழி தினத்தை சுவாமி விபுலானந்தரின் நினைவு தின கொண்டாட்டத்துடன் இணைந்த வகையில் யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (30.06.2026)யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. அரச கரும மொழிகள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துடன் யாழ்ப்பாண தமிழ் சங்கத்தினதும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினது ஒத்துழைப்புடன் இந் நிகழ்வு எதிர்வரும் ஜூலை மாதத்தில் திருவள்ளுவர் மண்டபத்தில் கொண்டாடப்படவுள்ளது. இந் நிலையில் இந் நிகழ்வை சிறப்பாகக் கொண்டாடுவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் செயற்படுத்தும் முகமாக நிகழ்வுகளின் பொறுப்புக்கள் பகிர்தளிக்கப்பட்டன. நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் இருந்து மணிக்கூட்டு சந்தி ஊடாக திருவள்ளுவர் மண்டபத்திற்கு தமிழ் பண்பாட்டு பாரம்பரிய நிகழ்வுகளுடன் நடைபவனி நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டதுடன், நிகழ்வில் முன்னெடுக்கப்படவுள்ள பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட விழா ஏற்பாடுகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு க.சிவகரன் ,உதவிமாவட்ட செயலாளர் செல்வி.தர்சினி,உள்ளக மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திருமதி உ. சிவகாமி, யாழ்ப்பாண தமிழ் சங்க பெருந்தலைவர் வாழ்நாட் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ், ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ், யாழ்ப்பாண தமிழ்ச்சங்க உப செயலாளர் திரு.யோகேந்திரன் நிவேதன், யாழ் பல்கலைக்கழக தமிழ் துறை பேராசிரியர் கி.விசாகரூபன், வட மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் திரு. ஜி.பார்த்தீபன், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் திரு.எஸ்.சிறிவாகீசன், மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு. மா. அருள்ச்சந்திரன், தேசிய அரச கரும மொழிகள் திணைக்கள மாகாண பொறுப்பதிகாரி திரு. என்.உமானாத், வட மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர், மாவட்ட கலாச்சார பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் விடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
பலாலி பகுதிகளில் பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டில் உள்ள அரச மற்றும் தனியார் காணிகள் தொடர்பான முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் கடந்த 2026.06.24 அன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. காணி விவகாரங்கள் தொடர்பாக முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக அமைந்த இந்தக் கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் கெளரவ மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் கெளரவ அனுர கருணாதிலகமற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் கெளரவ ஜனித ருவன் கொடிதுவக்கு ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர்.
காணி உரிமை குறித்த மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான அரசாங்க முயற்சிகளை விரைவுபடுத்துதல், சமூக-பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவித்தல் மற்றும் பிராந்திய நிர்வாக அமைப்புகளுடன் இணைந்து உட்கட்டமைப்பு அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லுதல் குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது. இந் நடவடிக்கைகள் தேசிய நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்ற செயற்பாடுகளின் முக்கிய அங்கங்களாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக எல்லை மறுசீரமைப்புகளை இறுதி செய்வது, இழப்பீட்டு வழங்கல் நடைமுறைகளை விரைவுபடுத்துவது மற்றும் எதிர்காலத்தில் உரிய உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டிய காணிகளை முன்னுரிமைப்படுத்துவது ஆகிய விடயங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
இக் கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அவர்கள், கடந்த மாதம் யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் பல பகுதிகளுக்கு மேற்கொண்ட களப் பயணத்தின் போது பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பாகப் பெற்ற அனுபவங்களையும் அவதானிப்புகளையும் பகிர்ந்து கொண்டார். மேலும், தொடர்புடைய அரச நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் காணி மீளளிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான நடைமுறை வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இறுதியில் உரிய காணிகளை விடுவிப்பது தொடர்பாக, தேசிய பாதுகாப்பு சபையில் கலந்துரையாடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவ மற்றும் விமானப்படைத் தளபதிகள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலர்,பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரிகள், இராணுவ மற்றும் விமானப்படை உயரதிகாரிகள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
 
1 2 3 5 7 8
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை மற்றும் மாவட்ட செயலகம் என்பன இணைந்து நடாத்தும் போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தின விழிப்புணர்வு நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (26.06.2026) பி. ப 3.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், இன்றைய நாள் போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக ஜூன் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 3ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது. போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக அனைவரும் அக்கறையோடு கடமையாற்ற வேண்டிய தேவை இருப்பதாகவும் இது தொடர்பாக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப் பொருளுக்கு எதிரான" முழு நாடும் ஒன்றாக" (ரட்டம எகட்ட)தேசிய நிகழ்ச்சி திட்டத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பித்து வைத்துள்ளதாகவும் இது தொடர்பான செயற்பாடுகள் மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கடந்த காலங்களில் போதைப் பொருள் சம்பந்தமான கட்டுப்பாட்டு நிலைமைகள் ஒவ்வொரு சீர்திருத்த கட்டுப்பாட்டு நிலைமையிலும் முன்னெடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயம் எனவும், இருப்பினும் ஆங்காங்கே போதை பொருட்களினுடைய பயன்பாடு அதிகரித்து வருகின்ற நிலைப்பாடுகளும் தற்கொலை சம்பவங்கள் அதிகரிக்கின்ற நிலைமையும் காணப்படுவதாக உறுதிப்படுத்தக் கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
மேலும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான முன்னேற்றகரமான செயற்பாடுகள் வரவேற்கத்தக்க விடயமாக உள்ளதாகவும் அதனுடைய பயன்பாட்டை கட்டுப்படுத்துவதாக இருந்தால் பிரதானமாக போதைப்பொருள் நாட்டுக்குள் வருகின்ற வழிவகைகளை கட்டுப்படுத்த வேண்டிய தேவைப்பாடு இருப்பதாகவும், அப்பொறுப்புணர்ந்தும் தேசிய ரீதியிலே நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் மாவட்ட ரீதியில் குற்றத்தடுப்பு போதை தடுப்பு,விசேட நடவடிக்கை குழு ஆகியவற்றின் மூலம் போதைப் பொருளை கட்டுப்படுத்தக்கூடிய நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்
வைத்தியசாலைகளிலும், போதை தடுப்பு மறுவாழ்வு நிலையங்களை இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி போதைப் பொருளுக்கு எதிரான மறுவாழ்வு வைத்தியசாலையின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களினால் போதை தடுப்பு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இணைந்து செயல்பட்டு வருவதற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்
பொதுமக்களின் மருந்துகளின் தவறான பாவனை தொடர்பாக ஆராயப்பட்டு போதிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டிய தேவைப்பாடு தொடர்பாகவும் மருந்தகங்களில் அபாயகரமான மருந்துகளை வழங்குவது தொடர்பாக போதிய அறிவுறுத்தல்களை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அவர்கள் வழங்குவார் எனவும் அது தொடர்பாக மருந்தகங்கள் தங்களுக்குரிய செயற்பாடுகளை சட்டங்களுக்கு அமைவாக மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு இருப்பதாகவும் தவறுகள் ஏற்படும் போது சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் காணப்படுவதாகவும், மருந்து சீட்டுகள் இல்லாமல் மருந்துகள் விநியோகிக்கப்படுவதாகவும் சாதாரணமான விடயமாக அமைந்துள்ளதாகவும் அதனைமாற்றி அமைக்கப்பட வேண்டிய விடயமாக உள்ளதாகவும் அபாயமான மருந்துகளை வழங்கியதன் பின்னர் அதனை சரியான இருப்பு பதிவேட்டில் பதிவை தொடர்பாகவும் அறிவுறுத்தல் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களினால் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்
அதேபோன்று காலாவதியான பொருட்கள் தொடர்பாக கவனம் எடுக்க வேண்டும் எனவும் காலாவதியான திகதி தொடர்பாக சரியான பொறிமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இது தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டத்திலே சரியான முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கு ஒவ்வொருவரும் ஒத்துழைப்புக்களும் வழங்க வேண்டும் எனவும் அசாதாரண சூழ்நிலையிலும் ஒவ்வொருவரும் தங்களுடைய கணிசமான பங்களிப்பை வழங்கி உள்ளதாகவும் மருந்தகங்கள் தட்டுப்பாடான காலத்திலும் மிக கடினமான பணியை ஆற்றிஉள்ளதாகவும் போதைப் பொருள் மாத்திரைகள் தொடர்பாக சரியான கவனம் எடுத்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் உலகளாவிய போதை பொருள் பிரச்சனை, தொடரும் சிக்கல்கள், புதிய சவால்கள், புதிய தீர்வுகள் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மருந்தக கட்டுப்பாட்டு முறைகள் தொடர்பாக மருந்த உரிமையாளர்கள், மருந்தாளர்களுக்கு அறிவுறுத்தல்களை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் அவர்கள் வழங்கியதுடன் விசவகை மற்றும் அபாயகரமான மருந்துகள் காட்சிப்படுத்தல் மேற்கொண்டு தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மாவட்ட இணைப்பாளர் திருமதி. சியாமினி அவர்களாலும் விளக்கமளிக்கப்பட்டது. இறுதியாக மருந்தக உரிமையாளர்கள், மருந்தாளர்களுக்கு போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு stickers வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு க. சிவகரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன், உளநல மருத்துவர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், மதுவரி திணைக்கள அதிகாரிகள், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்கள்,தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை இணைப்பாளர், உணவு மருந்து பரிசோதகர்கள், பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய சீர்திருத்த திணைக்கள உத்தியோகத்தர்கள், மருந்தக உரிமையாளர்கள் மற்றும் மருந்தாளர்கள், மாவட்ட இணைப்பாளர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், தடுப்பு சிகிச்சை புனர்வாழ்வு குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10
மாலைதீவில் 18.06.2026 ஆம் திகதி தொடக்கம் 20.06.2026 ஆம் திகதி வரை நடைபெற்ற South Asia Speed Skating Championship (ஸ்கேற்றிங் விரைவோட்டம்) போட்டியில் Dreamer United Sports Academy சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து ஒரே ஒரு மாணவியாக சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் ஆண்டு 09 இல் கல்வி கற்கும் மாணவி செல்வி ஷாருதி தர்மரூபன் அவர்கள் பங்குபற்றியிருந்தார். மாலைதீவில் நடைபெற்ற 2026 வேக ஸ்கேற்றிங் சாம்பியன்ஷிப் போட்டியில், Dreamers United Sports Academy சார்பில் பங்கேற்ற மாணவி செல்வி சாருதி இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று பெருமை சேர்த்துள்ளார்.100 மீட்டர் சாலைப் போட்டி மற்றும் 500 மீட்டர் சாலைப் போட்டிகளில் இரண்டாம் இடத்தையும், 500 மீட்டர் தடகளப் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனையொட்டி இன்றைய தினம் (26.06.2026) அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை மாணவி சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார் மேலும் அரசாங்க அதிபர் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பெருமையை தேடிதந்தமைக்காக தனது மகிழ்ச்சியினைத் தெரிவித்ததுடன், போட்டியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றமைக்கு தமது வாழ்த்துக்களையும் மாணவிக்கு தெரிவித்துக்கொண்டதோடு பரிசிலும் வழங்கி கெளரவித்தார். இச் சந்திப்பில் தென்மராட்சி வலய கல்விப் பணிப்பாளர் திரு. கிரிஸ்தோபர் கமல்ராஜன், விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. எல். அநுரகாந்தன், டிறிபேக் கல்லூரி ஆசிரியர்களான திரு. எஸ்.ஜெபநேசன், கு.ராஜதீபன்,மாணவியின் தாயார் திருமதி சிவசங்கரி தர்மரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4
யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டு குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (26.06.2026) பி.ப 2.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் அவர்களினால் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
1. பாடசாலை இடைவிலகல் மற்றும் மீளிணைப்பு செயல்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு 69 மாணவர்கள் பாடசாலை இடைவிலகள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று அதில் 60 மாணவர்கள் மீளிணைப்பு செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டு
இடைவிலகிய மாணவர்களின் குடும்பச் சூழல் பொருளாதார சூழல் காரணிகளை கிராம மட்ட உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
2. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 59 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் இவை தொடர்பாக பிரதேச மட்ட ரீதியா மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டு பிரதேச செயலாளர் தலைமையில் சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் இடை விலைகள் தொடர்பாக உரிய தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்
3.பிரதேச மட்ட ரீதியாக ஆராயப்பட்ட சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரதேச மட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு
தெளிவுபடுத்துவதற்கான ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்யுமாறு இதன்போது அரசாங்க அதிபரினால் மாவட்ட உத்தியோகத்திற்கு பணிக்கப்பட்டது.
4.பிறப்பு அத்தாட்சி பத்திரம் இல்லாத சிறுவர்களுக்கு பிறப்பு அத்தாட்சி பாத்திரத்தை பெற்று கொடுப்பதற்கான நடமாடும் சேவையினை எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குள் மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.
மேலும்சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற 204 முறைப்பாடுகளில்
ஒவ்வொரு பிரதேச செயலாளர்களினாலும் தீர்க்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் அடுத்த காலாண்டு கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என்றும் பிரதேச செயலாளர்களுக்கு தெரிவித்ததோடு பெண்களுக்கெதிரான பால்நிலை சார் வன்முறைகளை குறைப்பதற்கான இரண்டாம் காலாண்டுக்கான வேலை திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு
ஒரு மாவட்டத்தினுடைய மிக முக்கியமான கூட்டம் இதுவெனவும் ஒரு பிரதேசத்திற்கு பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனவும் அதற்குரிய பொறுப்பினை ஏற்றுக் கொள்ள வேண்டுமெனவும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு உங்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியதோடு எல்லோருடைய நோக்கமும் ஒன்று ஆனால் ஒவ்வொருவருடைய செயற்பாடுகளுமே வேறுபடுகின்றன என்றும் இதற்கு எல்லோருடைய ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10