யாழ். மாவட்ட சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கான நான்காம் கட்ட தெளிவூட்டல் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன் அவர்களின் தலைமையில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (16.04.2026) பி.ப 2.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அரசாங்கத்தினால் தற்போது அறிமுகப்படுத்துகின்ற புதிய திட்டங்கள் தொடர்பில் தெளிவூட்டல்களை வழங்கும் நோக்கில் குறித்த நிகழ்வு இன்றைய தினம் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நான்காம் கட்டமாக உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய், தெல்லிப்பளை, காரைநகர் மற்றும் நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கு குறித்த தெளிவூட்டல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ சுரேந்திரநாதன் அவர்களால் சமூக சக்தி குழுவின் வகிபாகங்கள் தொடர்பில், நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சமூக அபிவிருத்தி சபையின் செயலாளர்களான சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளித்தார். இக் கூட்டத்தில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளரும், யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ எஸ்.கபிலன், உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய், தெல்லிப்பளை, காரைநகர் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், குறித்த பிரதேச செயலகங்களின் பிரதி மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், விடய உத்தியோகத்தர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9
யாழ் மாவட்ட சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் கட்ட தெளிவூட்டல் நிகழ்வு இன்றைய தினம் (15.04.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் பி.ப 2.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தலைமை உரையாற்றிகையில், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம மட்டத்தில் நீண்ட காலமாக அனுபவமிக்க உத்தியோகத்தர்களாக காணப்படுகின்றார்கள் எனவும், காலத்திற்கு காலம் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதன் மூலம் தங்களது செயற்பாடுகளை கடந்த காலத்திலும் சிறப்பாக முன்னெடுத்திருந்தார்கள். உதாரணமாக கடந்த காலத்தில் டித்வா புயல் ஏற்பட்ட காலத்தில் கூட மக்களுக்கான உதவித்திட்டங்களை வழங்குவதில் கிராம அலுவலர்கள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்த வகையில் சிறப்பாக செயற்பட்டிருந்தமை பராட்டுக்குரியதாகும். மேலும், அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் கடப்பாடு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இருக்கிறது எனவும் தற்போதைய அரசாங்கத்தினுடைய பிரதான கொள்கைகளாக கிளீன் ஸ்ரீலங்கா, டிஜிட்டல் மயமாக்கல், சமூக சக்தி ஆகிய செயற்பாடுகள் காணப்படுகின்றன. எனவும், ஆகவே அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துபவர்களாக அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆகிய நாம் காணப்படுகிறோம் எனவும் தெரிவித்தார். மேலும்,
இந்தத் திட்டங்களை சமூக சக்தி (பிரஜாசக்தி) செயற்பாட்டை பிரதேச மட்டத்தில் செயற்படுத்துவதில் இந்த சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றார்கள். குழுவின் செயலாளர்களாக இருந்து அந்தக் குழுவை கொண்டு நடாத்துகின்ற பொறுப்பு அவர்களைச் சார்ந்ததாக இருக்கிறது எனவும், இதனால் உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கான தெளிவூட்டல்களை பெற்றுக்கொள்வதற்காகவே இக் கூட்டத்தை பகுதி பகுதியாக நடைபெற்றுவருகிறது எனவும், தொடர்ந்து தலைவர்களுக்கான கலந்துரையாடலும் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது எனவும், ஆகவே, சமூக சக்தி செயற்பாட்டை நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாட்டினை மேற்கொள்கின்றபோது உங்களுக்கு ஏதாவது இடர்பாடுகள் காணப்படுமாக இருந்தால் அந்த விடயங்களை இங்கு தெரிவிப்பதன் மூலம் தெளிவான அறிவைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், உங்களது கிராமம் சார்ந்த விடயங்களில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்ற நீங்கள் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம் சிறப்பாக கொண்டு செல்ல முடிவதுடன் மிகச் சரியான முறையில் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
அரசாங்கத்தினால் தற்போது அறிமுகப்படுத்துகின்ற புதிய திட்டங்கள் தொடர்பில் தெளிவூட்டல்களை வழங்கும் நோக்கில் குறித்த நிகழ்வு இன்றைய தினம் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இரண்டாம் கட்டமாக சாவகச்சேரி, கோப்பாய், ஊர்காவற்துறை, வேலனை ஆகிய பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கு குறித்த தெளிவூட்டல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு. சுரேந்திரநாதன் சமூக சக்தி (பிரஜாசக்தி) குழுவின் வகிபாகங்கள் தொடர்பில், நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சமூக அபிவிருத்தி சபையின் செயலாளர்களான சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளித்தார்.
தொடர்ந்து, சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்குரிய தெளிவூட்டல்களை இக் கூட்டத்தில் பெற்றுக் கொண்டார்கள். இந் நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளரும், யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ எஸ்.கபிலன், சாவகச்சேரி கோப்பாய், ஊர்காவற்துறை, வேலனை பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், குறித்த பிரதேச செயலகங்களின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், விடைய உத்தியோகத்தர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
 
 
1 2 3 4 5 6 8 9 10
தையிட்டி திஸ்ஸ விகாரை காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம்(11.04.2026) கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பிரசன்னத்துடன் மு.ப 11.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவின் தையிட்டி பகுதியில் திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியை விடுவிக்குமாறு17 பேர் தங்களுடைய கோரிக்கையினை முன்வைத்திருந்ததுடன், அவர்களுடைய காணி உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தார்கள். கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ ஹர்ஷன நாணயக்கார, கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் , தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவகங்கா ஆகியோரின் பங்குபற்றலுடன் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர்களுடைய உறுதிப்படுத்தப்பட்ட உறுதிகள் கையளிக்கப்பட்டன. மேற்படி காணிகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக நில அளவை திணைக்களத்தின் நில அளவீட்டை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் கடிதம் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் அவர்களது காணிகளை நில அளவீடு செய்ய வேண்டிய தேவைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் காணி உரிமையாளர்களுக்கு தகவல் அறிவித்து அவர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மேற்படி கலந்துரையாடலின் அதனடிப்படையில் எதிர்வரும் 17ஆம் திகதி காலை 9.00 மணிக்கு காணி உறுதிகளுக்கு அமைய காணி உரிமையாளர்களின் அடையாளப்படுத்தலுடன் நில அளவையினை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. மேலும் குறித்த காணிகள் நில அளவை திணைக்களத்தினால் அளவீடு செய்யப்பட்டு நில அளவைத் திணைக்களத்தின் வரைபடம் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் மாவட்ட செயலகத்தினால் ஏற்கனவே இது தொடர்பில் நியமிக்கப்பட்ட குறித்த குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு காணிகள் விடுவிப்பதற்குரிய தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மேற்படி கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு க.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திரு பா.ஜெயகரன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவகங்கா, சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர் திருஎன்.தர்மபாலா, நில அளவை அத்தியட்சகர் திரு V.பிரேமதாஸ, காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர், தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10
யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை புதுவருட தினத்தினை முன்னிட்டு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் (15.04.2026) காலை 9.05 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் கைவிசேடத்தினையும் வழங்கிவைத்தார். இந் நிகழ்வில் பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
 
1 2 3 4 5 6 7 8 9 10
தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி அபிமானி வர்த்தகக் கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் 2026 இன்றைய தினம்(10.04.2026) காலை காலை 9.30 மணிக்கு தென்மராட்சி பிரதேச செயலக வளாகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. தென்மராட்சி பிரதேச செயலாளர் திரு.F.C.சத்தியசோதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வமாக விற்பனை சந்தையைத் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளர் திரு.பொ.ஸ்ரீவர்ணன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக சாவகச்சேரி இலங்கை வங்கி முகாமையாளர் திரு.த.கபிலன் மற்றும் சாவகச்சேரி தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் திரு.கு.ஜேம்ஸ் இன்பராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இதன்போது, சமுர்த்தி பயனாளிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் செய்யப்பட்டன. இதன் மூலம் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதே பிரதான நோக்கமாகும்.
 
1 2 3 4 5 6 7 8 9