இலங்கை பெண்கள் பணியகமும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தினம் இன்றைய தினம் (31.03.2026) மு.ப 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் "பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை"எனும் தொனிப்பொருளில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண நகர அபிவிருத்தி சபை பிரதிப் பணிப்பாளர் திருமதி.க.கஜீவன் அவர்களும், கெளரவ விருந்தினராக பாலம் செயற்றிட்டம் முகாமையாளர் சுவீற்ரி தேவராஜா. அவர்களும் கலந்து கொண்டார்கள். பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் அவர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனை கண்காட்சி கலந்து கொண்டிருந்த விருந்தினர்களால் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் மங்கல விளக்கேற்றல், வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பவற்றுடன் ஆரம்பமானது. இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்றைய தினம் நடைபெறுவதாகவும், இன்றைய நிகழ்விற்கு இலங்கை நிர்வாக சேவையின் உயரிய பதவியில் உள்ள ஒருவரை அழைத்திருப்பதாகவும் மற்றும் மாகாணத்தில் அபிவிருத்திக்கான செயற்பாடுகளை வெளிப்படுத்தி மாகாணத்தை நகரம் சார்ந்த பொருளாதார ரீதியாக மாற்ற தனது பங்களிப்பை வழங்கியவர்களயும் அழைத்து இருப்பதாகவும் அந்த வகையில் நிர்வாக ரீதியான ஆளுமை கொண்டவர்களும் உயரிய பதவிகளையும் வகிக்கும் பெண் சமுதாய மூத்த அரச உத்தியோகத்தர்களை அழைத்து கெளரவப்படுத்தும் வகையிலும், பெண்களின் நிலைப்பாட்டை அல்லது வளர்ச்சி போக்கினை சமூகத்திற்கு எடுத்துரைப்பதற்காகவும் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பெண் தொழில் முயற்சியாளர்களை அடையாளப்படுத்தி ஊக்குவிக்கும் முகமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிளான சுய தொழில் முயற்சி கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பாலம் நிறுவனத்தின் அனுசரணையுடன் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவு ஒன்றையும் வழங்கவுள்ளதாகவும், மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் தொடர்பான நலன் நோன்பு திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும், பெண்கள் தொடர்பாக செயற்பாடுகள் மற்றும் பெண்கள் வளர்ச்சி மிகவும் போற்றத்தக்க வகையிலேயே பெண்கள் காணப்படுவதாகவும், எண்ணிக்கை ரீதியாக பெண்கள் மிக அதிகமாக காணப்படுவதாகவும், அதிலும் குறிப்பாக நிர்வாக ரீதியாக, தொழில் ரீதியாக, பல்கலைக்கழகத் துறை ரீதியாக போன்ற எல்லா துறைகளிலும் அவர்களின் எண்ணிக்கை ரீதியில் பெண்கள் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும், சனத்தொகை ரீதியில் பார்க்கும் போதும் ஆண்களை விட பெண்களின் வீதம் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஒரு பெண்ணின் வளர்ச்சியினை நோக்கும்போது தனிப்பட்ட ரீதியாக பார்க்கப்படாது அது சமூகம் சார்ந்த வளர்ச்சியாக பார்க்கப்படுவதாகவும், ஆரம்ப காலத்தில் பெண்கள் கல்வி கற்பதில் பல தடைகள் காணப்பட்டதாகவும், தடைகளை தகர்த்தெறிந்து கல்வியில் மேம்பட்டவர்களாக பெண்கள் காணப்படுவதாகவும், பெண்கள் தமது சந்ததியினரையும் கல்வியில் வழிப்படுத்துவதை காணக்கூடியதாக உள்ளதாகவும் "ஈன்று புறந்தருதல் தாயின் கடமையை சான்றோர் ஆக்குதல் தந்தையின் கடமை "எனக் கூறுவர் ஆனால் தற்போது இரண்டையும் பெண்களின் தமது கைகளில் எடுத்துள்ளதாகவும் பெண்கள் தாங்கள் பெற்ற அறிவை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும் என்ற நோக்கோடு செயற்பட்டு வருவதாகவும் அந்த வகையில் பெண்கள் நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியில் அளப்பரிய பங்களிப்பை ஆற்றி இருப்பதாகவும், மாவட்டத்திலுள்ள உத்தியோகத்தர்கள் பெண் தொழில் வளர்ச்சியிலே காத்திரமான பங்களிப்பை வழங்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
மேலும் இந் நிகழ்வில் சம்போல் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் திருமதி வைதேகி நரேந்திரன் அவர்களால் பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. இதனை விட 2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடாத்திய சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான கெளரவிப்பு மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அதிதிகளின் சிறப்புரைகள் என்பன நடைபெற்றது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.
 
 
1 2 3 4 7 8 9 10 12 11 13 14 15 16 17 18 19 20 22 23 24 25 26
மாவட்ட திட்டமிடல் உபகுழுக்கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (27.03.2026) பி. ப 02.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் மாவட்ட மட்டத்தில் சகல நிதி மூலங்களையும் உள்ளடக்கி நடைமுறைப்படுத்தப்படும், நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடைமுறைபடுத்தப்படும் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் விபரங்கள், வேலைத் திட்டங்கள் தொடர்பாக எழும் பல குற்றச்சாட்டுகள் காணப்படுவதாகும் தெரிவித்தார். மேலும், திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களைநிவர்த்தி செய்வதற்காக அதனை ஆழமாகவும், விரிவாகவும் கலந்துரையாட வேண்டிய தேவை காணப்படுவதாகவும், அதனை நோக்காக கொண்டு இக் கூட்டம் விசேடமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, இக் கூட்டம் ஆரோக்கியமாக நடைபெறவும் ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் நல்குமாறும் கெளரவ அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு பிரேரணைகளை சமர்ப்பிப்பதற்கு முன்னர் திட்டமிடல் உப குழுக்கூட்டத்தில் விடயங்களை பரிசீலித்து அது தொடர்பாக முழுமையாக ஆராய்வதனூடாக அக் கூட்டத்தில் விரிவாக ஆராய வேண்டிய தேவை காணப்படாது எனவும் இது முதலாவது திட்டமிடல் உப குழுக்கூட்டம் என்பதால் அடுத்த கூட்டத்தில் திட்டங்கள் தொடர்பான பிரேரணைகளை பரிசீலித்து தீர்மானங்களை எடுக்கும் கூட்டமாக முன்னெடுக்க முடியும் என தெரிவித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ திரு. எஸ் கபிலன் அவர்களால் திட்டமிடல் குழுவின் நோக்கங்கள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்களத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (2026.03.24) காலை 9.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகமானது சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரே சீரான பொறிமுறை ஊடக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டதுடன், அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொழும்பில் இருந்து எடுத்து வருதல், உள்ளூர் உற்பத்திப் பொருட்களை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லுதல், விவசாயம் மீன்பிடி போன்ற அத்தியாவசிய தேவைப்பாடுகளுக்கு எரிபொருள் சீராக விநியோகத்தினை வழங்குதல் தொடர்பாகவும், மேலதிக எரிபொருள் விநியோகம் தொடர்பாக உரிய மேலதிக வழிகாட்டுதல்களைப் பெற்று வழங்குவது தொடர்பாகவும் அரசாங்க அதிபரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (27.03.2026) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்புரையாற்றுகையில், இவ்வாண்டின் முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களையும், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கெளரவ தவிசாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றதுடன், கடந்த 2025 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை மத்திய, மாகாண, அரச வேறுபாடுகள் இன்றி மாவட்ட மக்களுடைய தேவைகளை தீர்த்துக் கொள்ளக்கூடிய வகையிலே அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றியதாகவும், கிடைத்திருந்த நிதியை உச்சளவில் பயன்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதாகவும், ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயலாளர் என்ற ரீதியிலும் மாவட்ட அரசாங்க அதிபர் என்ற வகையிலும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் கௌரவ அமைச்சர் மற்றும் கௌரவ ஆளுநர் அவர்களின் வழிகாட்டுதல்களாலும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைவரது ஒத்துழைப்புக்களாலும் அபிவிருத்தி திட்டங்களை சாத்தியமாக்க கூடியதாக இருந்ததாகவும், பல்வேறுபட்ட சவால்கள் இருந்த போதிலும் அதனை வெற்றிகரமாக கொண்டு சென்றுள்ளதாகவும், அதற்கு அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன், ஒவ்வொருவரும் மாவட்டத்தின் அபிவிருத்தியில் அக்கறை கொண்டவர்களாக இருப்பதுடன், அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதுவதன் ஊடாக யாழ்ப்பாண அபிவிருத்தி செயல்பாடுகளை முன்னெடுக்க ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்குமாறும் தெரிவித்துடன், மக்களுடைய சமூகப் பொருளாதார வாழ்வியல் தேவைகளை அடையாளம் கண்டு அதனை நிறைவேற்றத்தக்க வகையிலே செயற்பாடுகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையுரையாற்றுகையில், எமது நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், மத்திய கிழக்கில் போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதகமான நிலை என்பது எமது நாட்டுக்கு மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியாக பல்வேறு நாடுகளுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்ளதை நாம் அறிந்த விடயம் எனவும், இதற்கு அமைவாக கலந்துரையாடல்கள் மற்றும் நிகழ்வுகளை மட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இந்த யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் என்பது யாழ்ப்பாண மாவட்டத்தின் செயற்பாடுகள் மற்றும் பல்வேறு நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக கலந்துரையாட வேண்டிய தேவைப்பாடு உள்ளமையினால் இக் கூட்டம் நடாத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், கூட்டத்திற்கு வருகை தந்துள்ள அனைவரையும் கெளரவ தலைவர் வரவேற்றார். கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் எடுத்த தீர்மானங்களுக்கு அமைய அதன் முன்னேற்ற நடவடிக்கைகளும் ஆராயப்பட்டது. மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், தற்போதைய எரிபொருள் விநியோகம், நகர அபிவிருத்தி திட்டம், சமூக சக்தி நிகழ்ச்சித் திட்டம், க்ளீன் ஸ்ரீலங்கா, விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டதுடன், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட விடயங்கள் மற்றும் தீர்வு காணப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சிவஞானம் சிறீதரன், கெளரவ வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், வட மாகாண கடற்படைத் தளபதி, பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 7 8 9 10 11 12 14
 
தெல்லிப்பளை J/244 வசாவிளான் கிழக்கு பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆவணம் யாழ்ப்பாண மாவட்ட அச்சுவேலி ஒட்டகப்புலம் 511 பிரிகேட்டின் கேணல் பி.எம்.சி. வன்னிநாயக்க அவர்களினால் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் இன்றைய தினம் (23.03.2026) மு. ப 9.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.பா. ஜெயகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
 
2 1 3 4