வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது நேற்றைய தினம் (27.02.2026) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அடிகளால் திருவிழாக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு உற்சவ நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. கொடியேற்றத்தைத் தொடர்ந்து, சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி என்பன இடம்பெற்றிருந்ததுடன் யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையில், பல பங்குத்தந்தையர்களின் பங்குபற்றலுடன் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. தொடர்ந்து இன்றைய தினம் காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையில், இலங்கை மற்றும் இந்திய அருட்தந்தையர்கள் இணைந்து, திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்றைய தினம் (28.02.2026)காலை திருப்பலி ஒப்புக்கொடுத்தலுடன் நிறைவடைந்தது. இலங்கை இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்த ஆண்டு 13500ற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் இலங்கை மற்றும் இந்திய அருட்தந்தையர்கள், பிரதம நீதியரசர் கொளரவ பிரிதீ பத்மன் சூரசேனன், கெளரவ கடற்றொழில் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், யாழ் இந்திய துணைத்தூதுவர் கெளரவ சாய் முரளி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்ச ன பனாகொட, வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், கடற்படை உயரதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை கெளரவ தவிசாளர், பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கடற்படையினர், பிரதேச செயலக மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் இலங்கை மற்றும் இந்திய நாட்டு பக்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமானது அஸ்வெசும மற்றும் குறைந்த வருமானம் பெறும் சமுர்த்திப் பயனாளிகளை பொருளாதார ரீதியாக வலுவூட்டும் நோக்கில் தொழிற் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில், இவ் வேலைத்திட்டத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (26.02.2026) மேலதில அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் பொ.ஸ்ரீவர்ணன், மூன்றாம் நிலை மற்றும் தொழில் கற்கைகள் ஆணைக்குழுவின் (TVEC) உதவிப் பணிப்பாளர் திரு. W.B விஜயசிங்ஹ ஆகியோரின் பங்குபற்றினார்கள். வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் அஸ்வெஸ் மபயனாளிகளை பலப்படுத்தி அவர்களது தொழிற்திறனை மேம்படுத்தி, சுயதொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே இத் திட்டத்தின் குறிக்கோளாகும். இதன் போது குறித்த திட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் நடைமுறைகள், வேலை வாய்ப்புக்கள், மூன்றாம் நிலை மற்றும் தொழில் கற்கைகள் ஆணைக்குழுவில் (TVEC) நிறுவனங்களை பதிவு செய்வதில் உள்ள பிரச்சினைகள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் தொழிற்பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில் வாய்ப்புக்களை வழங்குகின்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
 
 
1 2 3 4 5
சனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் நிதி உதவிகள் தொடர்பான தெளிவூட்டல் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25.02.2026) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், யாழ் மாவட்டத்திலிருந்து குறைந்த அளவான விண்ணப்ப படிவங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்து, சனாதிபதி நிதியத்தின் மூலம் பொதுமக்கள் நன்மையடைய வேண்டும் என்பதே அதிமேதகு சனாதிபதி அவர்களின் நோக்கமாகும் எனவும், இது தொடர்பில் கிராம அலுவலர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு களை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அத்துடன் அரசாங்க அதிபர் அவர்கள் கிராம அலுவலர்கள் கடமைகளில் எதிர் நோக்குகின்ற சவால்கள் தொடர்பாகவும் அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.
 
சனாதிபதி நிதியத்தின் மூலம் நிதியுதவி பெற்றுக் கொள்ளக்கூடிய அறுவை சிகிச்சைகள் மற்றும் நிதியுதவியின் அளவு, மருத்துவ உதவி அல்லாத ஏனைய கோரிக்கைகள், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது எதிர்பாராத அனர்த்த நிலைமைகளுக்கு ஆளாகும் மீனவர்களின் குடும்பங்களின் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கான கல்விக்கான உதவிகள், வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் ஏதேனும் எதிர்பாராத அனர்த்தங்களை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களில் அவர்களின் குடும்பங்களின் இந்த நாட்டில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்காக கல்வி உதவி வழங்குதல் போன்றவற்றுக்கான அறிவுறுத்தல்கள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கு தெளிவூட்டல் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு கே சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன், மாவட்ட செயலக பிரதம காணக்காளர் திரு. எஸ். கிருபாகரன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ. தர்ஷினி, நிர்வாக உத்தியோகத்தர் திரு. கி. பொ. தனபாலா, பிரதேச செயலாளர்கள், யாழ்ப்பாண மாவட்ட கிராம அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 10
மாற்றுத்திறன் நபர்களுக்கான மாவட்டம் மட்ட வழிகாட்டல் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு க.சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (26.02.2026) காலை 09:30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையுரையாற்றுகையில் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றுக் கொண்டதுடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாற்று ஆற்றல் உள்ளவர்கள் 10,395 பேர் காணப்படுவதாக பதிவில் இருப்பதாகவும், அவர்களுக்கான தேவைகள் மற்றும் வசதிகளை மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு காணப்படுவதாகவும், பிரதேச மட்டத்தில் இது தொடர்பாக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், பிரதேச மட்டத்தில் நடாத்தப்படும் வழிகாட்டல் கூட்டங்களில் இனங்காணப்படும் சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மாவட்ட மட்டத்தில் துறை சார் அதிகாரிகள் முன்னிலையில் சமர்ப்பித்து அதற்கான தீர்வுகள் வழங்கப்படுவதற்காக இக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும் மாற்றுத்திறன் நபர்களுக்கான வாக்குரிமை தொடர்பாகவும் விழிப்புணர்வு நடைபெற இருப்பதாகவும் இவர்கள் உரிமைகளை பாதுகாப்பதற்காக செயற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இது தொடர்பான கொள்கைகளை உருவாக்கும் போது அதனை நடைமுறைப்படுத்துவதில் பல சவால்கள் காணப்படுவதாகவும், மாற்று ஆற்றல் உடையவர்களின் உரிமைகளை பாதுகாப்பது அவசியமாக காணப்படுவதாகவும், அதன் வகிபாகம் சரியாக மேற்கொள்ளப்படும் போது அதன் செயற்பாடுகள் சிறப்பாக அமையும் எனவும், உரிமைகளை பாதுகாக்க அனைவரும் முன் நின்று செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் மாற்றுத்திறன் நபர்களுக்கான மாவட்ட மட்ட வழிகாட்டல் குழுவின் கட்டமைப்புகள், மாற்றுத்திறன் நபர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்துவதில் "PAVE யாழ்ப்பாண இளைஞர்கள் அமைப்பு" முன்னெடுத்த செயற்பாடுகள் மற்றும் தந்திரோபாய பரிந்துரைகள், மாற்றுத்திறன் நபர்களின் வாக்குரிமையை பாதுகாப்பதில் தேர்தல் ஆணைக்குழுவின் வகிபாகம், பிரதேச மட்டத்தில் மாற்றுத்திறன் நபர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகள் மற்றும் அதற்குரிய தீர்வுகள் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டன இக் கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் திரு. இ.சசீலன் வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி தனுஜா லுக்சாந்தன் ,வடமாகண சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் திருமதி ஹி.நித்தியா, இலங்கை தேர்தல் முறைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் நிகழ்ச்சி திட்ட அலுவலர் செல்வி அனோஜிதா சிவாஸ்கரன், மற்றும் மாவட்ட சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.தி.உமாசங்கர் மற்றும் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் ச சிரேஷ்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு. சு.வரதபாஸ்கரன் மாவட்ட உதவி கல்வி பணிப்பாளர்கள் மாவட்ட பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மாற்றுத்திறன் நபர்களுக்கான சுய உதவி குழுக்களின் பிரதிநிதிகள் இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6
வேல்ட் விசன் ( World vision ) நிறுவனத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (25.02.2026) பி.ப 12.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் "Together We Rise"எனும் பெயரில் ஆரம்பிக்கப்படவுள்ள 3 வருடங்களுக்கான திட்டத்திற்கான (Civil Society Organisation)சமூக பாதுகாப்பு அமைப்புக்களின் (Capacity Building) மேம்பாட்டு திறன் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடலாக இது அமைந்தது. இக் கலந்துரையாடலில் வேல் விஷன் (World Vision) நிறுவனத்தின் பிரதிநிதிகளான திட்ட மானியங்களின் செயற்பாட்டு முகாமையாளர் திரு பெஞ்சமின் தாஸ், நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ரி.றொசாந்தன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட திட்ட முகாமையாளர் திரு. ஜூட் நிஷாந்தன் ஆகியோர் பங்குபற்றிருந்தனர்.
 
 
1 2