யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (19.02.2026) பி. ப 03.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் 2026 ஆம் ஆண்டு நடைமுறைப்படவுள்ள பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், பிரஜாசக்தி உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ. சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ். சிவகுமாரன் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் திட்டமிடல் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6
முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் கீழ் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த முன்னேற்ற கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (19.02.2026) மு. ப. 11.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கடந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதியோர் சேவைகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் 2026 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இதேவேளை யாழ் மாவட்டத்தில் பதிவு செய்யாது இயங்கி வரும் முதியோர் இல்லங்கள் அனைத்தும் பதிவு செய்வதற்கான விண்ணப்ப படிவத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து பிரதேச செயலாளரின் சிபாரிசுடன் எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அரசாங்க அதிபரினால் அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், முதியோர் சேவைகள் தொடர்பிலான உரிய உத்தியோகத்தர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறியப்பட்டு அதற்கான தீர்வுகளும் அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டன. இக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, முதியோர் மேம்பாட்டு மாவட்ட இணைப்பாளர் திருமதி ஸ்பெல்மன் பாலகுமாரி, பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6
மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் (18.02.2026) காலை 10.00 மணிக்கு மண்டைதீவில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச துடுப்பாட்ட மைதான அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடலுக்கு வருகை தந்த விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. எஸ். அச்சுதன் அவர்களை யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பொன்னாடை அணிவித்து, மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்களால் மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டார் . இதன்போதுஅரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் உதவி தேர்தல்கள் ஆணையாளராகவும், தேர்தல்கள் திணைக்களத்தின் பிரதி தேர்தல்கள் ஆணையாளராகவும் பணியாற்றி இலங்கை நிர்வாக சேவைகள் விசேட தரத்திற்கு பதவியுயர்வு பெற்று விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக உயர்பதவி பெற்று யாழ்ப்பாணத்திற்கு முதல்தடவையாக வருகைதந்துள்ளார் எனவும், உயர்பதவியினைப் பெற்று யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் எனவும் குறிப்பிட்டார்.
 
 
1 2 3 4
மண்டைதீவில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச கிரிக்கெட் மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில், விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. எம். பி. என். எம். விக்ரமசிங்க மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் திரு எஸ். அச்சுதன் ஆகியோரின் பங்குபற்றலுடன் இன்றைய தினம் (18.02.2026) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் தொடர்பாக ஏற்கனவே பல ஆரோக்கியமான கருத்தாடல்கள் பகிரப்பட்டுள்ளதாகவும், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படுவதற்கு கை கொடுப்பதன் ஊடாக அபிவிருத்திகளை மேற்கொள்ள கூடியதாக காணப்படும் எனவும், அங்குள்ள பாடசாலை அபிவிருத்தி மற்றும் வணிக அபிவிருத்தி மேலும் அதிகரித்து செல்லும் நிலை காணப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், அதிமேதகு சனாதிபதி அவர்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் தினத்தன்று சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக அக்கறையுடன் கருத்துக்களை பகிர்ந்துள்ளதாகவும், மைதானத்தின் பூர்வாங்க நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் தெரிவித்ததுடன், இவ் மைதானத்தை அமைப்பதன் ஊடாக நீண்டகால நிலைத்திருக்கக்கூடிய தன்மைகளை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது தொடர்பாகவும் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக எவ்வாறான முன்னேற்றங்களை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாக சாதக, பாதக தன்மைகளை ஆராய்ந்து ஆரோக்கியமான கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார். மேலும் மண்டைதீவு மற்றும் வேலணையில் உள்ள பாடசாலைகள் மற்றும் பிரதேச வைத்தியசாலை ஆகியவற்றை அபிவிருத்தி தொடர்பாகவும் இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் பங்களிப்புக்களையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் கருத்து தெரிவிக்கையில், இக் கலந்துரையாடலின் நோக்கம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதன் ஊடாக விளையாட்டு நகரம் உருவாக்கப்படும் எனவும், இதனூடாக பல்வேறு இணைந்த உட்கட்டமைப்பு வசதிகள் அதனுடன் இணைந்த சேவைகள் போன்றவை தொடர்பாக இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் சூழலுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவகையில் மத்திய சுற்றாடல் அதிகார சபை கையாளுவதாகவும், இவ் மைதானத்தை அமைப்பதன் ஊடக வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும், வடக்கு மாகாண சபை மற்றும் பிரதேச சபையின் வருமானங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவித்து சர்வதேச விளையாட்டு மைதானம் தொடர்பான பல்வேறு கருத்தாடல்களை பகிர்ந்து கொள்ளுமாறும் தெரிவித்துக் கொண்டார். இக் கலந்துரையாடலில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கெளரவ எஸ். அசோக், ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ எஸ் கபிலன், விளையாட்டு அமைச்சின் பணிப்பாளர் திரு டிலும் தயாரத்தின, இலங்கை கிரிக்கெட் சங்கத்தினைச் சேர்ந்த திரு சாலக்கா என். சில்வா மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீ பெரேரா, மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், வேலணை பிரதேச செயலாளர் திரு ரி. அகிலன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்திரு. இ. சுரேந்திரன்நாதன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி, நில அளவைகள் திணைக்கள சிரேஷ்ட அத்தியட்சகர் திரு. எம். தர்மபால, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் மற்றும் துறை சார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 8 9 10 11
உற்பத்தித் திறன் போட்டிக்கு விண்ணப்பித்த மன்னார் பொது வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் அதற்கு முன்னேற்பாடாக யாழ்ப்பாணமாவட்ட செயலகத்தின் உற்பத்தித் திறன் செயற்பாடுகளை பார்வையிட நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில்இன்றைய தினம் (13.02.2026) காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலகத்திற்கு களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டு வருகைதந்தனர். மன்னார் பொது வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்களுடன் கலந்துரையாடிலில் ஈடுபட்டனர். பின்னர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன் அவர்களுடனான கலந்துரையாடலில் மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எம். எச். எம். அஸாத் ஹனிபா அவர்களும் இணைந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் செயற்பாடுகள் மற்றும் 5S செயற்பாடுகள், மாவட்ட செயலக நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக அறிந்துகொண்டதுடன், மேலதிக விளக்கங்களை முன்வைப்பின் ஊடகவும் அறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. மேலும், கிளை ரீதியாக முன்னெடுக்கப்பட்ட உற்பத்தித்திறன் செயற்பாடுகளை பார்வையிட்டு விபரங்களையும் செயற்பாடுகளையும் அறிந்துகொண்டனர். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகமானது 2020 ஆம் ஆண்டு உற்பத்தித்தித் திறன் போட்டியில் தேசிய ரீதியில் முதலாமிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. கள விஜயத்தின் நிறைவில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது, தாம் மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் செயற்பாட்டில் மென்பொருள் ரீதியான (software) நடைமுறைகள், கோப்பு நடைமுறைகள் மற்றும் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பாக பல புதிய விடயங்களை அறிந்து கொண்டதாக தெரிவித்தார்கள். இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், உற்பத்தித்திறன் செயற்பாடுகள் உள்ளத்திலிருந்து எழ வேண்டும் எனவும், இதன் பயன்கள் சேவை நாடிகளான பொதுமக்களை போய் சேர்வதிலேயே வெற்றி தங்கியுள்ளது எனவும், எமது மாவட்ட செயலகத்தினை பொறுத்தவரை ஒவ்வொரு உற்பத்தித்திறன் செயற்பாடுகளின் ஊடாக அரச செலவீனத்தை குறைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்
உற்பத்தித்திறன் செயற்பாடுகள் ஒவ்வொன்றினதும் வெளியீடு ஏதோ ஒரு வகையில் பொதுமக்களுக்கு நன்மை பயப்பதிலேயே வெற்றி தங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உற்பத்தித் திறன் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10