யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக 27.01.2026 அன்று புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் K.P.T. டி சில்வா அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (03.02.2026) காலை 09.00 மணிக்கு மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு மற்றும் டித்வா அனர்த்தத்தின் பாதிப்புக்கள் தொடர்பாகவும் அரசாங்க அதிபருடன் விரிவாக கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த அதிகாரிகளான மேஜர் ஜெனரல் ராசிக் மற்றும் கேணல் நிஷங்க ஆகியோரும் பங்குபற்றினார்கள். மேலும், அரசாங்க அதிபருடனான சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி ஆகியோரும் உடனிருந்தார்கள்.
 
 
1 2 3 4 5 7
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக திரு. கி. பொ. தனபாலா இன்றைய தினம் (02.02.2026) காலை 10.30 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கடமையேற்பதற்கு முன்னராக சம்பிரதாயபூர்வமாக நிர்வாக உத்தியோகத்தர் வரவேற்க்கப்பட்டார் என்பதுடன், அரசாங்க அதிபர் தலைமையில் பதவிநிலை உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலும் இடம் பெற்றது. இவ் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம பொறியியலாளர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள். நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்ற திரு. கி. பொ. தனபாலா அவர்கள், முன்னர் நல்லூர் பிரதேச செயலக நிர்வாக் உத்தியோகத்தராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் சூழலியல் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் சர்வதேச உலக ஈர நில தினம் இன்றைய தினம் (02.02.2026) கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில், உலக ஈர நில தினம் யாழ் மாவட்டத்தின் நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அரியாலை கிழக்கு ஈரநில பிரதேசத்தில் இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் திரு. லோ.கி ஆனந் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இங்கு மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையில், உலக ஈரநில தினத்தின் தேசிய விழா இன்று பத்தரமுல்லை ‘அபே கம’ வளாகத்தில் பிரதமர் கெளரவ ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெறுகின்றது எனவும், அதற்கு இணையாக யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு யாழ். மாவட்ட மத்திய சிற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் இங்கு நடைபெறுகின்றது எனவும் தெரிவித்தார். மேலும், ஈர நிலங்கள் நீர் வளங்களைப் பாதுகாப்பதிலும், வெள்ள கட்டுப்பாட்டிலும், உயிரியல் பல்துறை பாதுகாப்பிலும் முக்கிய பங்காற்றுகின்றன எனவும், இவற்றை நாம் பாதுகாக்க வேண்டிய அவசியத்தினையும் எடுத்துக் கூறினார். மேலும், இவ்வாறான பிரதேசங்களைப் பாதுகாத்து இயற்கைச் சமநிலையை பேணுவது முக்கியமானதாகும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
"ஈரநிலங்கள் மற்றும் பாரம்பரிய அறிவு - கலாசார பாரம்பரிய தந்தைக்காக கொண்டாடுதல் "எனும் தொனிப்பொருளில் இன்றைய தினம் உலகளாவிய ரீதியாக கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வு விழிப்புணர்வு நடைபவனியுடன் ஆரம்பமாகி கண்டல் தாவர மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டதுடன், விழிப்புணர்வு உரைகளுடன் ஈர நில தினம் தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட வழிகாட்டல் கையேடுகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர், யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சுற்றாடல் பிரிவு பொலிஸார், யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள், தெல்லிப்பளை யூனியன் கல்லூரி சுற்றாடல் முன்னோடி சனாதிபதி பதக்கதாரி மாணவர்கள், பாடசாலை சுற்றாடல் கழக முன்னோடி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
 
1 2 3 4
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக திரு. கி. பொ. தனபாலா இன்றைய தினம் (02.02.2026) காலை 10.30 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கடமையேற்பதற்கு முன்னராக சம்பிரதாயபூர்வமாக நிர்வாக உத்தியோகத்தர் வரவேற்க்கப்பட்டார் என்பதுடன், அரசாங்க அதிபர் தலைமையில் பதவிநிலை உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலும் இடம் பெற்றது. இவ் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம பொறியியலாளர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள். நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்ற திரு. கி. பொ. தனபாலா அவர்கள், முன்னர் நல்லூர் பிரதேச செயலக நிர்வாக் உத்தியோகத்தராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
ஊர்காவற்றுறையில் வீடமைப்புத் திட்டத்திற்காக சிவகுரு ஆதீனத்தினால் 15 ஏக்கர் காணி அன்பளிப்பு செய்வதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கும் சிவகுரு ஆதீன நம்பிக்கை நிதியத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய வேலவன் சுவாமி உள்ளிட்ட அங்கத்தவர்களுக்குமிடையில் இன்றைய தினம் (02.02.2026) காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், ஊர்காவற்றுறையில் காணியற்று இருப்பவர்களுக்கு காணி வழங்க முன்வந்தமைக்காக தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், காணியினை முறையாக பங்கீடு செய்து, பங்கீட்டின் அளவிற்கு ஏற்ப வீடமைப்புத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும், அதில் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் தலா 02.00 மில்லியன் ரூபாவில் ஒரு குடும்பத்திற்கான வீடமைப்புத் திட்டம் வழங்க முடியும் எனவும் தெரிவித்தார். மேலும், அக் காணியில் குடிநீர், மின்சார இணைப்பு மற்றும் வீதி நிர்மாணிப்பு போன்ற உட்கட்டுமான அபிவிருத்தியினை மேற்கொண்டு ஒரு அமைதியான கிராமமாக உருவாக்க முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த சிவகுரு ஆதீன நம்பிக்கை நிதியத்தினர், தங்களால் வழங்கவுள்ள 15 ஏக்கர் காணியில் - 10 ஏக்கர் காணியில் காணியற்ற குடும்பங்களுக்கு வீடமைப்புத் திட்டத்திற்காக வழங்கவும், 05 ஏக்கரில் ஒரு ஏக்கர் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தேவைக்காகவழங்கவும், மிகுதி ஆதீனம் மற்றும் பொதுத் தேவைப் பயன்பாட்டிற்காக பயன்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்து, தொடர்ச்சியான சட்டரீதியான கையளிப்பு தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.
 
 
 
1 2 3 4 5