வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்தத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், இன்றைய தினம் (27.01.2026) மு. ப. 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள வருடாந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்காக, அதற்கான நிதி விடயங்கள் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போது, விழாவுக்கான செலவீன திட்டமிடல், தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டிய நிதி விடயங்கள் தொடர்பிலான ஒழுங்கமைப்புக்கள் தொடர்பில் அரசாங்க அதிபர் கெளரவ தவிசாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே.சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு. என்.பிரபாகரன், கடற்படை அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர், விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5
யாழ்ப்பாண மாவட்டத்தில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான மிகுதிக் கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்துக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (26.01.2026) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ். மாவட்ட செயலக முன்றலில் வைத்து குறித்த வீட்டுத் திட்ட பயனாளிகள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் சந்தித்து கலந்துரையாடி தமது கோரிக்கை மனுவை கையளித்தார்கள். இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வீட்டுத் திட்ட பயனாளிகள் கருத்துத் தெரிவிக்கையில், 2019ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் இன்று வரையும் தமக்கு வழங்கப்படவில்லை எனவும், இதனால் வீட்டுத் திட்டங்களை பூர்த்தி செய்ய முடியாதுள்ளதாகவும், குடியிருந்த தற்காலிக வீடுகளை அகற்றியுள்ளதாகவும், கடன்பட்டும் வீட்டுத் திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாதுள்ளதாகவும், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது அன்றாட வாழ்க்கையை நடத்திவருவதாகவும் தமது பக்க நிலைமைகளை தெரிவித்தார்கள்.
இதற்கு பதிலளித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், இவ் விடயம் தொடர்பாக தொடர்ச்சியாக கலந்துரையாடப்பட்டு வருவதாகவும்,2018 ஆம் ஆண்டு 1883 வீடுகளும், 2019 ஆம் ஆண்டு 1933 வீடுகளுமாக மொத்தமாக 3816 வீடுகள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலமாக ஆரம்பிக்கப்பட்டு பகுதி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய மிகுதி கொடுப்பனவுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை தொடர்பாக வீடமைப்பு நிர்மாணிப்புகெளரவ அமைச்சர் மற்றும் துறைசார் திணைக்களங்களுடனும் கலந்துரையாடியுள்ளதாகவும், மேலும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களிலும் ஆராயப்பட்டுள்ளது எனவும், உங்களது கோரிக்கைகள் தொடர்பில் தங்களால் கையளித்த கோரிக்கை மனுவினை உரியவர்களுக்கு தெரியப்படுத்துவதாகவும் தெரிவித்தார். மேலும், இவ்வாண்டு இத் திட்டங்களில் உள்ள 66 வீடுகளுக்கு தலா 10 இலட்சம் வீதம், ஏற்கனவே வழங்கப்பட்ட தொகையினை கழித்து பயனாளிகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ. சுரேந்திரநாதன் ஆகியோரும் உடனிருந்தார்கள்.
 
1 2 3 4 5 6 7 8
 
2026 ஆம் ஆண்டுக்கான மாவட்ட விலை நிர்ணயக் குழுக்கூட்டத்தின் முதலாவது அரையாண்டுக்கான கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையிலும், வடக்கு மாகாண பிரதம பிரதிச் செயலாளர் (பொறியியல்) திரு. சுதாகர் அவர்களின் இணைத் தலைமையிலும் இன்றைய தினம் (23.01.2026) பி. ப 02.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், மாவட்ட விலை நிர்ணயக் கூட்டமானது மிக முக்கியமானது எனவும், அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் மற்றும் தனியார் துறைக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான விலைகள் நிர்ணயம் தேவையாகவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதன் விலைக்கு பொருட்கள் சேவைகளை பெற முடியாத நிலைமையும் காணப்படுவதாகவும், அதற்கேற்ப பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் சேவை வழங்குனர்கள் இணைந்து விலைகளை நிர்ணயம் செய்யுமாறும், அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாட்டிற்கு இது அத்தியாவசியமாகவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான விலைகள் ஆராயப்பட்டு நிர்ணயிக்கப்பட்டது. இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், பிரதம பொறியியலாளர் திரு க. திருக்குமார், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், தொடர்புடைய சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 6 6 7 8 9 10
காரைநகர், புதுவீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அம்பாள் முன்பள்ளியின் கட்டடத் திறப்பு விழா பிள்ளையார் சனசமூக நிலையம் தலைவர் திரு. நா.பாலகிருஷ்ணன் தலைமையில் இன்றைய தினம் (25.01.2026) காலை 09.00 மணிக்கு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினரா வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் கெளரவ கிருஷ்ணன் கோவிந்தராஜன், காரைநகர் பிரதேச செயலாளர் திருமதி ரஞ்சனா நவரத்தினம், தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திருஞானசம்பந்தன் ஞானச்சந்திரன், தீவக வலயக் கல்வி (முன்பள்ளிகள்) உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. சிவசுப்பிரமணியம் பவானந்தன் மற்றும் ஓய்வுபெற்ற அதிபர் திரு. எஸ்.கே.சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். பொது மக்களின் பங்களிப்பில் 14.20 மில்லியன் ரூபாவில் இவ் முன்பள்ளிக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மாணவர்களின் வரவேற்பு நடனம், பிள்ளையார் நடனம், கும்மி நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன இந் நிகழ்வில் பெற்றோர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 9
16 ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்றைய தினம் (23.01.2026) முற்றவெளி மைதானத்தில் காலை 10.30 மணியளவில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. "பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில்" எனும் தொனிப்பொருளில் ஆரம்பமான யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை தொடர்ந்து 24 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களிலும் காலை 10.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணிவரை குறித்த கண்காட்சி இடம்பெறவுள்ளது. இந் நிலையில், இதன் தொடக்க விழா நிகழ்வுகள் இன்றைய தினம் காலை யாழ்ப்பாணம் தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. தொடக்க விழாவைத் தொடர்ந்து, விருந்தினர்கள் மங்கல வாத்தியங்களுடன் யாழ். முற்றவெளி மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இந் நிகழ்வில் விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் கெளரவ ஸ்ரீ சாய் முரளி, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமக, பலாலி விமானப்படை கட்டளை அதிகாரி, லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டுச் சேவைகள் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. அர்ஜுன் தர்மதாச மற்றும் பணிப்பாளர் திரு. ஏ.எப்.எம். பாரூக், யாழ்ப்பாண வணிகர் மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் திரு. குலசிங்கம் வசீகரன், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி திரு. கே.விக்னேஷ், லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டுச் சேவைகள் நிறுவனத்தின் சிரேஷ்ட திட்ட முகாமையாளர் திரு. இமால்கா முல்லேகம, வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் அனுசரணை நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
விருந்தினர்களால் நாடா வெட்டி கண்காட்சிக் கூடங்கள் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன. தொடர்ந்து விருந்தினர்கள் வர்த்தகக் கூடங்களைப் பார்வையிட்டனர். யாழ்ப்பாணம் வர்த்தக தொழில் துறை மன்றத்தினர் ஏற்பாட்டில் பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில் 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண் காட்சியானது இம்முறை 16 ஆவது தடவையாக மிகச்சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இங்கு விவசாயம், தொழில்நுட்பம், விருந்தோம்பல், கல்வி, உணவு, நவநாகரி கம் மற்றும் இதர தொழிற்துறைகள் என பல்வேறுபட்ட வர்த்தக நிறு வனங்களின் பொருட்கள் மற்றும் சேவைகள் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் வகையில் பல்வேறுபட்ட வழங்குனர்களால் 400 க்கு மேற்பட்ட காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
1 2 3 4 5 5 6 7 7 8 9 10 11