யாழ். சங்கானை இந்து இளைஞர் மன்றத்தின் கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு இன்று (02.08.2026) காலை 8.00 மணியளவில், சங்கானை இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் திரு. ராகுலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். மேலும், பாராளுமன்ற உறுப்பினரும் சங்கானை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ வைத்தியர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா, பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ கருணநாதன் இளங்குமரன் மற்றும் கௌரவ ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு. எஸ். கபிலன், சங்கானை பிரதேச செயலாளர் திருமதி உதயகுமார் கவிதா, பிரதேச சபை உறுப்பினர்கள் கௌரவ பா. கஜமுகன் மற்றும் கௌரவ புவிகரன் காயளினி, கிராம உத்தியோகத்தர், சங்கானை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர், கழக அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இத் திட்டத்திற்காக அமைச்சினால் ரூபாய் 4.1 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றம் இடம்பெற்றது. பின்னர் வரவேற்புரை மற்றும் சிறப்புரைகள் நிகழ்ந்தன.
இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும் சங்கானை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ வைத்தியர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா அவர்கள், சங்கானை நகரம் வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும். இங்குள்ள சந்தையும் கூட்டுறவுச் சங்கமும் சங்கானைக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்கியுள்ளன. மேலும், பல்வேறு சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகளில் முன்னிலை வகித்த நகரமாகவும் சங்கானை திகழ்கிறது. இவ்வாறான பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராகச் செயற்படுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பணியின் ஒரு பகுதியாக, இளைஞர்களுக்கான விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவது முன்னுரிமையாகக் கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். விளையாட்டு மைதானங்கள் இல்லாத சூழலில் இளைஞர்கள் தவறான பாதைகளுக்குச் செல்லும் அபாயம் இருப்பதால், அவர்களின் ஆற்றலை நேர்மறையான வழியில் வழிநடத்த விளையாட்டை ஊக்குவிப்பது அவசியம் என்றார். இந்த மைதானத்தை நவீனமயமாக்குவதற்காக சுமார் ரூ. 41 இலட்சம் நிதி ஒதுக்கியமைக்காக அமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்ததுடன், மைதானத்திற்கான மலசலகூட வசதி மற்றும் பாதுகாப்பு வேலி அமைப்பதற்கும் தேவையான நிதி வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்திருப்பதையும் வரவேற்றார். இப்புனரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்து, இப்பகுதி இளைஞர்கள் மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தொடர்ந்து, கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகளை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே அவர்கள் கழக அங்கத்தவர்களிடம் கையளித்து திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
1 2 3 45 6 7 8 10 11 12 13 16 17 19 20
சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகமாக பதவியுயர்வு பெற்று கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் திரு. பரஞ்சோதி பிரபாகர் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழாவும் பிரியாவிடை நிகழ்வும், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்று (31.07.2026) பிற்பகல் 3.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திரு. பரஞ்சோதி பிரபாகர் அவர்கள் 1992 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் எழுதுநராக அரச சேவையில் இணைந்தார். பின்னர் காணிப்பதிவாளராகவும், பிரதிப் பதிவாளர் நாயகமாகவும் பணியாற்றிய அவர், 2026 ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகமாக பதவியுயர்வு பெற்று கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகத்தில் கடமையாற்றவுள்ளார். இந் நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், திரு. பரஞ்சோதி பிரபாகர் அவர்கள் மாவட்டச் செயலகத்தில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர் என்றும், தனது பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றியதோடு, சக உத்தியோகத்தர்களுடன் எளிமையாகவும் அமைதியாகவும் பழகும் பண்புடையவராகத் திகழ்ந்தார் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், சவாலான நிர்வாக விடயங்களைக் கூட அமைதியாகவும் துணிச்சலுடனும் கையாளும் திறமை கொண்டவர் என்றும், குறிப்பாக தேர்தல் காலங்களில் ஆளணி, போக்குவரத்து மற்றும் முறைப்பாட்டு பிரிவுகளின் பொறுப்புகளை மிகவும் திறமையாக நிறைவேற்றியமை பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார். அவரது புதிய பதவியில் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் வாழ்த்துரைகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து, மாவட்ட அரசாங்க அதிபரால் திரு. பரஞ்சோதி பிரபாகர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. இறுதியாக, திரு. பரஞ்சோதி பிரபாகர் அவர்கள் ஏற்புரையாற்றி, தன்னுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார். இந் நிகழ்வில் மாவட்டச் செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
1 2 3 4 5 6 7 8 9 10 12 13

வெகுஜன ஊடகப் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்தன அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட, ஊடகவியலாளர்களை ஊக்கமூட்டும் நிகழ்ச்சி இன்றைய தினம்(31.07.2026) காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமை வகித்தார். இந் நிகழ்வில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.எச்.எஸ்.ஜே. பண்டார, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நளாயினி இன்பராஜ், அரசாங்க தகவல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் (தொடர்பாடல்) திரு. எல்.பி.திலகரட்ண உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் வரவேற்புரையுடன் தலமையுரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான தெளிவூட்டல் மற்றும் ஊக்கமூட்டல் கலந்துரையாடல் நிகழ்ச்சி அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறுவதாக தெரிவித்தார். மேலும், வட மாகாணத்தில் வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ்வாண்டுக்கான தெளிவூட்டல் மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்வாக இது அமைந்துள்ளதாகவும், ஊடகவியலாளர்களின் தொழில்முறை மேம்பாடு மற்றும் ஊடகத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் முன்பாக ஊடகவியலாளர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் இணைந்து அவர்களை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடிதாகவும், பயிற்சி நிகழ்வினை நிறுத்தி இந் நிகழ்வினை ஊடகவியலாளர்களின் பிரச்சனைகளை கோரிக்கைகளை கலந்துரையாடுவதற்கான நிகழ்வாக இதனை மேற்கொள்ளவுள்ளதாகவும், இதில் கலந்துகொள்ளுமாறு ஊடகவியலாளர்களிடம் கோரிக்கையினை முன்வைத்ததாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். இது தொடர்பான விடயங்கள் கௌரவ பிரதி அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும், மேலும், ஊடகவியலாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தும் என்ற நம்பிக்கையுடன் இக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுவதாகவும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களின் தொழில் முறைத் திறன்களை மேம்படுத்துவதில் இந் நிகழ்வு முக்கிய பங்காற்றும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும் ஊடகத்துறை சார்ந்த பிரதி அமைச்சர் ஒருவர் எமது மாவட்டத்திற்கு நேரடியாக வருகை தந்துள்ளதுடன் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை, கோரிக்கைகளை, தேவைப்பாடுகளை முன்வைக்கின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இச் சந்தர்ப்பத்திற்கு கௌரவ பிரதி அமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்வு அரசாங்கத்தின் பிரதி அமைச்சருடன் ஊடகவியலாளர்கள் தங்களுடைய தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சனைகளை கலந்துரையாடுவதற்கான நல்ல வாய்ப்பாகும் என தெரிவித்தார். தொடர்ந்து, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. எச்.எஸ்.ஜே. பண்டார அவர்கள், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிகள் மற்றும் ஊடகங்களுடனான ஒருங்கிணைப்பு பணிகள் தொடர்பாக விளக்கவுரையாற்றினார்.
தொடர்ந்து, வெகுஜன ஊடகப் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பல ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர். அதற்கு பிரதி அமைச்சர் உரிய விளக்கங்களையும் பதில்களையும் வழங்கினார். மேலும், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் 2025 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கிய "செயலக மடல்" யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களால் கௌரவ பிரதி அமைச்சர் அவர்களிடம் வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், அரசாங்க தகவல் திணைக்களத்தின் தலைமைப் பீட உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக ஊடகப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 10 11 12 13 14 16 17 18 20
சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகமாக பதவியுயர்வு பெற்று கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் திரு. பரஞ்சோதி பிரபாகர் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழாவும் பிரியாவிடை நிகழ்வும், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்று (31.07.2026) பிற்பகல் 3.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திரு. பரஞ்சோதி பிரபாகர் அவர்கள் 1992 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் எழுதுநராக அரச சேவையில் இணைந்தார். பின்னர் காணிப்பதிவாளராகவும், பிரதிப் பதிவாளர் நாயகமாகவும் பணியாற்றிய அவர், 2026 ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகமாக பதவியுயர்வு பெற்று கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகத்தில் கடமையாற்றவுள்ளார். இந் நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், திரு. பரஞ்சோதி பிரபாகர் அவர்கள் மாவட்டச் செயலகத்தில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர் என்றும், தனது பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றியதோடு, சக உத்தியோகத்தர்களுடன் எளிமையாகவும் அமைதியாகவும் பழகும் பண்புடையவராகத் திகழ்ந்தார் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், சவாலான நிர்வாக விடயங்களைக் கூட அமைதியாகவும் துணிச்சலுடனும் கையாளும் திறமை கொண்டவர் என்றும், குறிப்பாக தேர்தல் காலங்களில் ஆளணி, போக்குவரத்து மற்றும் முறைப்பாட்டு பிரிவுகளின் பொறுப்புகளை மிகவும் திறமையாக நிறைவேற்றியமை பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார். அவரது புதிய பதவியில் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் வாழ்த்துரைகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து, மாவட்ட அரசாங்க அதிபரால் திரு. பரஞ்சோதி பிரபாகர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. இறுதியாக, திரு. பரஞ்சோதி பிரபாகர் அவர்கள் ஏற்புரையாற்றி, தன்னுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார். இந் நிகழ்வில் மாவட்டச் செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
1 2 3 4 5 6 7 8 9 10 12 13

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாட்டின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி இன்றைய தினம் (31.07.2026) முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையிலும் பங்குபற்றலுடனும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11